• Sep 03 2025

காலிமுகத்திடல் போராட்டம்; சட்டமா அதிபரிடம் CID ஆலோசனை

Chithra / Sep 3rd 2025, 3:34 pm
image

 

2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம்  திகதி அன்று காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு திணைக்களம், சந்தேகநபர்களுக்கு எதிரான, எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளது.

இந்த வழக்கில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மிலான் ஜயதிலக்க, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்  உட்பட 37 பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளை முடித்துவிட்டதாகவும், விசாரணையின் சுருக்கங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

இருப்பினும், சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் மன்றுக்கு அறிவித்தது.

அதன்படி, சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்துமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டு நீதவான் அறிவிப்பை வெளியிட்டார்.

நீதிவான் விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டம்; சட்டமா அதிபரிடம் CID ஆலோசனை  2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம்  திகதி அன்று காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு திணைக்களம், சந்தேகநபர்களுக்கு எதிரான, எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளது.இந்த வழக்கில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மிலான் ஜயதிலக்க, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்  உட்பட 37 பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.இது தொடர்பான வழக்கு நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளை முடித்துவிட்டதாகவும், விசாரணையின் சுருக்கங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இருப்பினும், சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் மன்றுக்கு அறிவித்தது.அதன்படி, சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்துமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டு நீதவான் அறிவிப்பை வெளியிட்டார்.நீதிவான் விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement