• Aug 01 2025

திருகோணமலையில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

Chithra / Jul 31st 2025, 3:57 pm
image


திருகோணமலை மாவட்ட கிண்ணியா A15 பிரதான வீதியில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

சுகாதாரத்துக்கு கேடான மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற முறைப்பாடுகளுக்கு அமைய மீன் சந்தையை கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இன்று (31) பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகதார மருத்துவ அதிகாரிகள் சகிதம் மீன்களை பரிசோதிப்பதற்காக திடீர்  சுற்றி வளைக்கும் பணிகள்  இடம்பெற்றன.

இதன்போது பாவனைக்கு உதவாத ஒரு தொகை மீன்கள் கைப்பற்றப்பட்டு, தவிசாளர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. 

இனிவரும் காலங்களில் இவ்வாறான பாவனைக்கு உதவாத மீன்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


திருகோணமலையில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு திருகோணமலை மாவட்ட கிண்ணியா A15 பிரதான வீதியில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.சுகாதாரத்துக்கு கேடான மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற முறைப்பாடுகளுக்கு அமைய மீன் சந்தையை கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இன்று (31) பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகதார மருத்துவ அதிகாரிகள் சகிதம் மீன்களை பரிசோதிப்பதற்காக திடீர்  சுற்றி வளைக்கும் பணிகள்  இடம்பெற்றன.இதன்போது பாவனைக்கு உதவாத ஒரு தொகை மீன்கள் கைப்பற்றப்பட்டு, தவிசாளர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இவ்வாறான பாவனைக்கு உதவாத மீன்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement