• Aug 01 2025

புறப்பட்ட 14 விநாடிகளில் தரையில் விழுந்த ராக்கெட்; விண்வெளியின் முதல் முயற்சி - தோல்வி கண்ட அவுஸ்ரேலியா!

shanuja / Jul 31st 2025, 5:13 pm
image

அவுஸ்ரேலியாவில் முதன்முறையாக விண்ணில் செலுத்த முயன்ற ராக்கெட், புறப்பட்ட  14 விநாடிகளிலேயே 

தரையில் விழுந்த விபத்துக்குள்ளானது.


இதனால் முதல்முறையாக ராக்கெட்டை விண்ணில் ஏவ முயன்ற அவுஸ்ரேலியா, முதல் பயணத்திலேயே தோல்வியைக் கண்டுள்ளது.  


அவுஸ்ரேலியாவின் கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால்  எரிஸ் எனும்  ராக்கெட் தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. 


அவுஸ்ரேலியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்த முயன்ற முதல் ராக்கெட் இது ஆகும்.இது சிறிய செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டது


அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் சோதனை தளத்தில் இருந்து வானில் பறந்த எரிஸ் ராக்கெட்,  புறப்பட்ட 14 விநாடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  


ராக்கெட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.


முதல் முதலாக விண்ணில் ஏவ முயன்ற ராக்கெட் விபத்துக்குள்ளானதில், விண்வெளிப் பயணத்தில் தோல்வியடைந்துள்ளமை  அவுஸ்ரேலியாவிற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


எனினும் விண்வெளித்துறையை நோக்கி முதன்முதலாக அவுஸ்ரேலியா எடுத்துள்ள முயற்சிக்கு சக நாடுகளும் பாரட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

புறப்பட்ட 14 விநாடிகளில் தரையில் விழுந்த ராக்கெட்; விண்வெளியின் முதல் முயற்சி - தோல்வி கண்ட அவுஸ்ரேலியா அவுஸ்ரேலியாவில் முதன்முறையாக விண்ணில் செலுத்த முயன்ற ராக்கெட், புறப்பட்ட  14 விநாடிகளிலேயே தரையில் விழுந்த விபத்துக்குள்ளானது.இதனால் முதல்முறையாக ராக்கெட்டை விண்ணில் ஏவ முயன்ற அவுஸ்ரேலியா, முதல் பயணத்திலேயே தோல்வியைக் கண்டுள்ளது.  அவுஸ்ரேலியாவின் கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால்  எரிஸ் எனும்  ராக்கெட் தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. அவுஸ்ரேலியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்த முயன்ற முதல் ராக்கெட் இது ஆகும்.இது சிறிய செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டதுஅவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் சோதனை தளத்தில் இருந்து வானில் பறந்த எரிஸ் ராக்கெட்,  புறப்பட்ட 14 விநாடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  ராக்கெட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.முதல் முதலாக விண்ணில் ஏவ முயன்ற ராக்கெட் விபத்துக்குள்ளானதில், விண்வெளிப் பயணத்தில் தோல்வியடைந்துள்ளமை  அவுஸ்ரேலியாவிற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் விண்வெளித்துறையை நோக்கி முதன்முதலாக அவுஸ்ரேலியா எடுத்துள்ள முயற்சிக்கு சக நாடுகளும் பாரட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement