• May 28 2025

ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களால் உக்ரைனை தாக்கிய ரஷ்யா..!

Sharmi / May 27th 2025, 2:02 pm
image

ரஷ்யா, ஒரே இரவில் 300 க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அணிவகுத்த ட்ரோன்கள் குறித்து உக்ரைன் இராணுவ தரப்பு கூறும்போது, "உக்ரைனின் யூரி இஹ்நாட் தலைமை விமானப்படை தளத்தை குறிவைத்து நேற்று இரவு (26) ரஷ்யா 355 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

இது மூன்றாண்டு கால போரில் இதுவரை இல்லாத தீவிர தாக்குதலாகும். இதில் சிலர் காயம் அடைந்துள்ளனர். உயிர்ப்பலி குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை என்று கூறியுள்ளது.

ட்ரோன் தாக்குதலுக்கு முதல் நாள் ரஷ்யா 9 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இருந்தது.

அதற்கு முந்தைய நாள்  ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 12 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களால் உக்ரைனை தாக்கிய ரஷ்யா. ரஷ்யா, ஒரே இரவில் 300 க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.அணிவகுத்த ட்ரோன்கள் குறித்து உக்ரைன் இராணுவ தரப்பு கூறும்போது, "உக்ரைனின் யூரி இஹ்நாட் தலைமை விமானப்படை தளத்தை குறிவைத்து நேற்று இரவு (26) ரஷ்யா 355 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.இது மூன்றாண்டு கால போரில் இதுவரை இல்லாத தீவிர தாக்குதலாகும். இதில் சிலர் காயம் அடைந்துள்ளனர். உயிர்ப்பலி குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை என்று கூறியுள்ளது.ட்ரோன் தாக்குதலுக்கு முதல் நாள் ரஷ்யா 9 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இருந்தது. அதற்கு முந்தைய நாள்  ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 12 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement