வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துறைமுகத்துவாரத்தின் இழுவைப் பாதை சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீள இயக்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெருகல் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (17)இடம் பெற்ற போது தனது பிரேரனையை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துறைமுகத்துவாரத்தின் இழுவைப் பாதை சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி
மாணவர்களும் பயணிகளும் மிகுந்த போக்குவரத்து சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதனைத் தீர்க்கும் பொருட்டு மேற்படி இழுவைப் பாதை சேவையினை உடனடியாக மீளத் தொடங்க ஆவன செய்ய வேண்டும்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இன்மையால் இங்கு வாழும் மக்கள் எரிபொருள் நிரப்புவதற்கு 20-25 கிலோமீட்டர் தூரம்
பயணிக்க வேண்டியுள்ளது . இதனைத் தீர்க்கும் பொருட்டாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பொருத்தமான இடத்தில் எரிபொருள் நிரப்பும்
நிலையமும் அமைக்கப்பட வேண்டும். அத்துடன் வாகனப் புகைப் பரிசோதனை நிலையமும் அமைக்கப்பட வேண்டும்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பிறப்பு, இறப்பு பதிவாளர் இல்லை. இதனால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பதிவாளரை நியமிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கிராமத்தில் மீன்பிடித்துறை நிறுவ ஆவன செய்ய வேண்டும்.
வெருகல் மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகளை தெளிவாக அடையாளப்படுத்த ஆவன செய்தல்.கல்லரிப்பில் இருந்து வெருகல் விவசாயிகளின் வயல்களுக்கு நீர் வழங்க ஆவன செய்தல் உளளிட்ட பல விடயங்களை முன்வைத்து உரையாற்றினார்.
துறைமுகத்துவாரத்தின் இழுவைப் பாதையை மீள இயக்குங்கள் - சண்முகம் குகதாசன் எம்.பி தெரிவிப்பு வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துறைமுகத்துவாரத்தின் இழுவைப் பாதை சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீள இயக்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கோரிக்கை விடுத்துள்ளார். வெருகல் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (17)இடம் பெற்ற போது தனது பிரேரனையை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துறைமுகத்துவாரத்தின் இழுவைப் பாதை சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும் பயணிகளும் மிகுந்த போக்குவரத்து சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதனைத் தீர்க்கும் பொருட்டு மேற்படி இழுவைப் பாதை சேவையினை உடனடியாக மீளத் தொடங்க ஆவன செய்ய வேண்டும். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இன்மையால் இங்கு வாழும் மக்கள் எரிபொருள் நிரப்புவதற்கு 20-25 கிலோமீட்டர் தூரம்பயணிக்க வேண்டியுள்ளது . இதனைத் தீர்க்கும் பொருட்டாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பொருத்தமான இடத்தில் எரிபொருள் நிரப்பும்நிலையமும் அமைக்கப்பட வேண்டும். அத்துடன் வாகனப் புகைப் பரிசோதனை நிலையமும் அமைக்கப்பட வேண்டும். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பிறப்பு, இறப்பு பதிவாளர் இல்லை. இதனால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பதிவாளரை நியமிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கிராமத்தில் மீன்பிடித்துறை நிறுவ ஆவன செய்ய வேண்டும்.வெருகல் மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகளை தெளிவாக அடையாளப்படுத்த ஆவன செய்தல்.கல்லரிப்பில் இருந்து வெருகல் விவசாயிகளின் வயல்களுக்கு நீர் வழங்க ஆவன செய்தல் உளளிட்ட பல விடயங்களை முன்வைத்து உரையாற்றினார்.