பெல்ஜியத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் கலந்துகொள்ள இருந்த இசை விழா மேடையொன்று திடீரன முழுமையாம தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியை உலுக்கியுள்ளது.
பெல்ஜியத்தின் உலகப் புகழ்பெற்ற டுமாரோலேண்ட்” (Tomorrowland) என்று அழைக்கப்படும் இசைத் திருவிழா பல லட்சக்கான மக்களின் பங்குபற்றலுடன் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இசைவிழா பெல்ஜியத்தின் பூம் நகரில் நாளை வெள்ளிக்கிழமை (18) ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், இசை விழாவின் பிரதான மேடையில் நேற்று (16) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினால் டுமாரோலேண்ட் இசைத் திருவிழாவின் பிரதான மேடை கடுமையாக சேதமடைந்துள்ளது என்று விழா ஏற்பாட்டாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தீப்பற்றிய மேடையை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன் ஆங்காங்கே தீயில் வெடித்து சிதறிய பொருட்களையும் அகற்றினர்.
இசைவிழாவில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்குபற்ற இருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை விழா ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது விழாவில் கலந்துகொள்ள வந்தவர்கள் இசைமேடைப் பகுதியில் இருக்கவில்லை. ஆனால் சுமார் 1,000 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீரென தீப்பற்றியதில் இதுவரையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இசை மேடை முற்றாக சேதமடைந்துள்ளதால் நடைபெற இருந்த நிகழ்வு மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
பெல்ஜியத்தில் தீடிரென தீயில் கருகிய இசைமேடை - கணப்பொழுதில் தப்பிய சுமார் 1 லட்சம் மக்கள் பெல்ஜியத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் கலந்துகொள்ள இருந்த இசை விழா மேடையொன்று திடீரன முழுமையாம தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியை உலுக்கியுள்ளது. பெல்ஜியத்தின் உலகப் புகழ்பெற்ற டுமாரோலேண்ட்” (Tomorrowland) என்று அழைக்கப்படும் இசைத் திருவிழா பல லட்சக்கான மக்களின் பங்குபற்றலுடன் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இசைவிழா பெல்ஜியத்தின் பூம் நகரில் நாளை வெள்ளிக்கிழமை (18) ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், இசை விழாவின் பிரதான மேடையில் நேற்று (16) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ விபத்தினால் டுமாரோலேண்ட் இசைத் திருவிழாவின் பிரதான மேடை கடுமையாக சேதமடைந்துள்ளது என்று விழா ஏற்பாட்டாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். தீப்பற்றிய மேடையை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன் ஆங்காங்கே தீயில் வெடித்து சிதறிய பொருட்களையும் அகற்றினர்.இசைவிழாவில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்குபற்ற இருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை விழா ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டபோது விழாவில் கலந்துகொள்ள வந்தவர்கள் இசைமேடைப் பகுதியில் இருக்கவில்லை. ஆனால் சுமார் 1,000 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். திடீரென தீப்பற்றியதில் இதுவரையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இசை மேடை முற்றாக சேதமடைந்துள்ளதால் நடைபெற இருந்த நிகழ்வு மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.