• May 03 2025

எதிர்க்கட்சியினர் தேர்தலில் வெல்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க தயார்- ஜெகதீஸ்வரன் எம்.பி பகிரங்கம்..!

Sharmi / May 2nd 2025, 10:49 pm
image

எதிர்க்கட்சியினர் தேர்தலில் எவ்வாறான யுக்திகளை பயன்படுத்த வேண்டும் என்ற வெல்வதற்கு தேவையான ஆலோசனைகள் தேவைப்பட்டால் வழங்க தயார் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று(02)  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் நேற்றையதினம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியினரின் மேதினத்திற்கு திரண்டவர்களை பார்க்கின்ற போது தேசிய மக்கள் சக்தியை மக்கள் விரும்புகின்றார்கள்.

அது அபிமானம் மிக்க கட்சியாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.

இந்நிலையில் வடமாகாணத்திலும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதற்குக் காரணம் என்னவென்றால் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்திக்கு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையே காரணமாக காணப்படுகின்றது.

 உண்மையில் அவர்கள் இவ்வாறான செயற்பாட்டை மாற்றி இதுவரை காலமும் என்ன செய்தார்கள்.

இனி என்ன செய்யப் போகின்றார்கள் என்பதனை கூறுவார்களாக இருந்தால் அது ஆக்கபூர்வமானதாக இருக்கும்.

அது அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பாக கூட இருக்கலாம்.

எனவே, அவர்கள் தேர்தல் யுக்திகளை மாற்றி அமைப்பது தான் சிறப்பு.

எனவே அவர்கள் எதிர்வரும் தேர்தல்களிலாவது தேர்தல் யுத்திகளை மாற்றி வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கலாம்.

தேவை ஏற்பட்டால் எதிர்க்கட்சியினர் தேர்தலில் எப்படி யுக்திகளை பயன்படுத்த வேண்டும் எவ்வாறு ஆக்கபூர்வமான செயற்பாட்டை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனைகளை தேவைப்பட்டால் அதனை வழங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் தேர்தலில் வெல்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க தயார்- ஜெகதீஸ்வரன் எம்.பி பகிரங்கம். எதிர்க்கட்சியினர் தேர்தலில் எவ்வாறான யுக்திகளை பயன்படுத்த வேண்டும் என்ற வெல்வதற்கு தேவையான ஆலோசனைகள் தேவைப்பட்டால் வழங்க தயார் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.வவுனியாவில் இன்று(02)  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.காலிமுகத்திடலில் நேற்றையதினம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியினரின் மேதினத்திற்கு திரண்டவர்களை பார்க்கின்ற போது தேசிய மக்கள் சக்தியை மக்கள் விரும்புகின்றார்கள். அது அபிமானம் மிக்க கட்சியாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.இந்நிலையில் வடமாகாணத்திலும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதற்குக் காரணம் என்னவென்றால் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்திக்கு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையே காரணமாக காணப்படுகின்றது. உண்மையில் அவர்கள் இவ்வாறான செயற்பாட்டை மாற்றி இதுவரை காலமும் என்ன செய்தார்கள். இனி என்ன செய்யப் போகின்றார்கள் என்பதனை கூறுவார்களாக இருந்தால் அது ஆக்கபூர்வமானதாக இருக்கும். அது அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பாக கூட இருக்கலாம்.எனவே, அவர்கள் தேர்தல் யுக்திகளை மாற்றி அமைப்பது தான் சிறப்பு. எனவே அவர்கள் எதிர்வரும் தேர்தல்களிலாவது தேர்தல் யுத்திகளை மாற்றி வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கலாம்.தேவை ஏற்பட்டால் எதிர்க்கட்சியினர் தேர்தலில் எப்படி யுக்திகளை பயன்படுத்த வேண்டும் எவ்வாறு ஆக்கபூர்வமான செயற்பாட்டை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனைகளை தேவைப்பட்டால் அதனை வழங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement