மஹவ - அநுராதபுரம் ரயில் மார்க்கத்திற்கு சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை நிறுவுவதற்காக இந்திய அரசாங்கத்தால் முதல் தவணையாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 770 மில்லியன் ரூபாய்) விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 2025 ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்துரையாடி ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்க முன்மொழிந்திருந்தாலும்,
2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியின் இந்தியாவிற்கு அரச முறைப் பயணத்தின்போது இது மானியமாக மாற்றப்பட்டது.
இந்திய உதவியுடன், வடக்கு மாகாண ரயில் மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்கள் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மேம்பட்ட சமிக்ஞை அமைப்பு மூலம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ரயில் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான அடிப்படைப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2026 ஒகஸ்ட் மாதத்திற்குள் இதனை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்தியாவின் முதல் தவணை நிதி விடுவிப்பு மஹவ - அநுராதபுரம் ரயில் மார்க்கத்திற்கு சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை நிறுவுவதற்காக இந்திய அரசாங்கத்தால் முதல் தவணையாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 770 மில்லியன் ரூபாய்) விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2025 ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்துரையாடி ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்க முன்மொழிந்திருந்தாலும், 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியின் இந்தியாவிற்கு அரச முறைப் பயணத்தின்போது இது மானியமாக மாற்றப்பட்டது. இந்திய உதவியுடன், வடக்கு மாகாண ரயில் மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்கள் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மேம்பட்ட சமிக்ஞை அமைப்பு மூலம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ரயில் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான அடிப்படைப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2026 ஒகஸ்ட் மாதத்திற்குள் இதனை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.