• Aug 02 2025

இலங்கையின் அரச வைத்தியத்துறையில் IVF முறையில் பிறந்த முதல் குழந்தை

Chithra / Aug 1st 2025, 1:10 pm
image

 

இலங்கையின் அரச வைத்தியத்துறையில் வெளிச் சோதனை முறை கருத்தரிப்பு முறையில் (in-vitro fertilization) வெற்றிகரமாக முதலாவது  குழந்தை நேற்றையதினம் பிறந்துள்ளது.

இந்த குழந்தை ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிசேரியன் மூலம் பிறந்துள்ளது.

பிரசவத்தின் பின்னர் 31 வயதுடைய தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் IVF நிலையத்தின் ஒரு வருட கால முயற்சியின் விளைவாக இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இந்த IVF செயற்கை கருத்தரிப்பு முறை முதன் முதலில் பல்கலைக்கழகத்தின் கருத்தரித்தல் மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.  

அரசாங்கம் நடத்தும் IVF திட்டத்திற்குப் பின்னர் அரச வைத்தியசாலையில் குழந்தை ஒன்று பிறப்பது இதுவே முதல் முறை ஆகும்.

களனி பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர் பேராசிரியர் ரசிக்கா ஹேரத் தலைமையிலான மருத்துவக் குழுவால் சிசேரியன் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதனை, அதே பீடத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளரும் கருத்தரித்தல் வைத்தியர் நிபுணர் சுரங்க ஹெட்டிபத்திரண தலைமையிலான மருத்துவக் குழுவால் நடத்தப்பட்ட அரச கருத்தரித்தல் மையத்தில் நடத்தப்பட்ட முதலாவது வெற்றிகரமான IVF கருத்தரிப்பு என்பதிலும் குறிப்பிடத்தக்கது.

வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (IVF – in vitro fertilization) அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியே பெண் உயிரின் கரு முட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும்.

இது செயற்கைக் கல முறைமூலம் செய்யப்படும் கருக்கட்டல் ஆகும்.

இலங்கையின் அரச வைத்தியத்துறையில் IVF முறையில் பிறந்த முதல் குழந்தை  இலங்கையின் அரச வைத்தியத்துறையில் வெளிச் சோதனை முறை கருத்தரிப்பு முறையில் (in-vitro fertilization) வெற்றிகரமாக முதலாவது  குழந்தை நேற்றையதினம் பிறந்துள்ளது.இந்த குழந்தை ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிசேரியன் மூலம் பிறந்துள்ளது.பிரசவத்தின் பின்னர் 31 வயதுடைய தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் IVF நிலையத்தின் ஒரு வருட கால முயற்சியின் விளைவாக இடம்பெற்றுள்ளது.கடந்த ஆண்டு இந்த IVF செயற்கை கருத்தரிப்பு முறை முதன் முதலில் பல்கலைக்கழகத்தின் கருத்தரித்தல் மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.  அரசாங்கம் நடத்தும் IVF திட்டத்திற்குப் பின்னர் அரச வைத்தியசாலையில் குழந்தை ஒன்று பிறப்பது இதுவே முதல் முறை ஆகும்.களனி பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர் பேராசிரியர் ரசிக்கா ஹேரத் தலைமையிலான மருத்துவக் குழுவால் சிசேரியன் செய்யப்பட்டுள்ளது.இந்த சாதனை, அதே பீடத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளரும் கருத்தரித்தல் வைத்தியர் நிபுணர் சுரங்க ஹெட்டிபத்திரண தலைமையிலான மருத்துவக் குழுவால் நடத்தப்பட்ட அரச கருத்தரித்தல் மையத்தில் நடத்தப்பட்ட முதலாவது வெற்றிகரமான IVF கருத்தரிப்பு என்பதிலும் குறிப்பிடத்தக்கது.வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (IVF – in vitro fertilization) அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியே பெண் உயிரின் கரு முட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும்.இது செயற்கைக் கல முறைமூலம் செய்யப்படும் கருக்கட்டல் ஆகும்.

Advertisement

Advertisement

Advertisement