நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) பிற்பகல் ஒரு மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. வரையிலான கனமழை பெய்யக்கூடும்.
மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, புத்தளம் மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 மி.மீ. வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று ஒரு மணிக்குப் பின் கனமழை நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) பிற்பகல் ஒரு மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. வரையிலான கனமழை பெய்யக்கூடும்.மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, புத்தளம் மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 மி.மீ. வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். இந்நிலையில் வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.