• May 03 2025

மறைந்த நல்லை ஆதீன குருமுதல்வரை நினைவேந்தி சந்நிதியான் ஆச்சிரமத்தில் பிரார்த்தனை..!

Sharmi / May 2nd 2025, 10:39 pm
image

இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்காக இன்றைய தினம் விசேட பிரார்த்தனை நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பலரும் இறைபதம் அடைந்த நல்லை ஆதீன குரு முதல்வருக்கு இறை ஆசி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்  தலைமையில் இடம்பெற்றது. 

இதில் ஆன்மீக அருளுரையாக  “ஈழத்தில் சைவம்” என்ற தலைப்பில்,பொது சுகாதார பரிசோதகர் ஜெ.கோபிராஐ் அருளுரை நிகழ்த்தினார்.



மறைந்த நல்லை ஆதீன குருமுதல்வரை நினைவேந்தி சந்நிதியான் ஆச்சிரமத்தில் பிரார்த்தனை. இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்காக இன்றைய தினம் விசேட பிரார்த்தனை நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.இதில் பலரும் இறைபதம் அடைந்த நல்லை ஆதீன குரு முதல்வருக்கு இறை ஆசி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்  தலைமையில் இடம்பெற்றது. இதில் ஆன்மீக அருளுரையாக  “ஈழத்தில் சைவம்” என்ற தலைப்பில்,பொது சுகாதார பரிசோதகர் ஜெ.கோபிராஐ் அருளுரை நிகழ்த்தினார்.

Advertisement

Advertisement

Advertisement