• Aug 02 2025

உலக சாதனை படைக்க 42 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்த இளைஞனுக்கு நடந்த துயரம்

Chithra / Aug 1st 2025, 12:56 pm
image


உலக சாதனை படைக்க 42 மீட்டர் உயரத்தில் இருந்து மின்னேஹாஹா நீர்வீழ்ச்சியில் ( டெத் டைவிங்) குதித்த இளைஞன் படுகாயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் உள்ள மின்னேஹாஹா நீர்வீழ்ச்சியில் இச் சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 


21 வயதான வாலி கிரஹாமின் என்பவரே இவ்வாறு படுகாமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நீர்வீழ்ச்சியில் குதித்த பிறகு அவர் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர அறுவை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். 

இளைஞனின் காதுகுழாய் மற்றும் மண்டை ஓடு ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 


விழுந்ததில் அவரது தோலும் பாதிக்கப்பட்டுள்ளது

இந்த காணொளி இலங்கையிலும் தற்போது வைரலாகி வருகின்றது. 

டெத் டைவிங் என்பது மிகவும் ஆபத்தான ஒரு செயல்பாடு என்பதால் அனுபவம் வாய்ந்த வீரர்களால் மட்டுமே செய்யப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.


உலக சாதனை படைக்க 42 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்த இளைஞனுக்கு நடந்த துயரம் உலக சாதனை படைக்க 42 மீட்டர் உயரத்தில் இருந்து மின்னேஹாஹா நீர்வீழ்ச்சியில் ( டெத் டைவிங்) குதித்த இளைஞன் படுகாயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள மின்னேஹாஹா நீர்வீழ்ச்சியில் இச் சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 21 வயதான வாலி கிரஹாமின் என்பவரே இவ்வாறு படுகாமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீர்வீழ்ச்சியில் குதித்த பிறகு அவர் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர அறுவை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். இளைஞனின் காதுகுழாய் மற்றும் மண்டை ஓடு ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விழுந்ததில் அவரது தோலும் பாதிக்கப்பட்டுள்ளதுஇந்த காணொளி இலங்கையிலும் தற்போது வைரலாகி வருகின்றது. டெத் டைவிங் என்பது மிகவும் ஆபத்தான ஒரு செயல்பாடு என்பதால் அனுபவம் வாய்ந்த வீரர்களால் மட்டுமே செய்யப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement