• Aug 02 2025

56 பாடசாலை மாணவர்கள் உட்பட பலரின் உயிரோடு விளையாடிய பேருந்து சாரதி

Chithra / Aug 1st 2025, 12:17 pm
image

 

கந்தளாய், தம்புள்ளை பகுதியிலிருந்து 56 பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை ஏற்றிக்கொண்டு திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற  பேருந்து சாரதி, மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில் இன்று அதிகாலை கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளையில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து புறப்பட்ட  பேருந்து, கந்தளாய் குளத்திற்கு அருகில் வைத்து போக்குவரத்து பொலிஸாரால் மறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதன்போதே சாரதி மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சாரதி உடனடியாக கந்தளாய் தலைமையக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு,  பேருந்து கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பஸ்சில் பயணித்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பான  வகையில், பொலிஸாரின் ஏற்பாட்டில் மாற்று  பேருந்து சாரதி வரவழைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்களது பயணத்தைத் தொடர அனுப்பி வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சாரதிக்கு எதிராக குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி திரு. எஸ். கே. சமரசிங்க தெரிவித்துள்ளார்.

56 பாடசாலை மாணவர்கள் உட்பட பலரின் உயிரோடு விளையாடிய பேருந்து சாரதி  கந்தளாய், தம்புள்ளை பகுதியிலிருந்து 56 பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை ஏற்றிக்கொண்டு திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற  பேருந்து சாரதி, மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில் இன்று அதிகாலை கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தம்புள்ளையில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து புறப்பட்ட  பேருந்து, கந்தளாய் குளத்திற்கு அருகில் வைத்து போக்குவரத்து பொலிஸாரால் மறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போதே சாரதி மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.இதனையடுத்து, சாரதி உடனடியாக கந்தளாய் தலைமையக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு,  பேருந்து கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பஸ்சில் பயணித்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பான  வகையில், பொலிஸாரின் ஏற்பாட்டில் மாற்று  பேருந்து சாரதி வரவழைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்களது பயணத்தைத் தொடர அனுப்பி வைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்ட சாரதிக்கு எதிராக குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி திரு. எஸ். கே. சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement