• Aug 02 2025

லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக இலங்கை மாறும் - ஜனாதிபதி

Chithra / Aug 1st 2025, 8:23 am
image


இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் எனஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாலைதீவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்கும் நிகழ்வில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படும்.  லஞ்சம் கொடுக்கவும், வாங்குவதற்கும் பயப்பட வேண்டும். மக்கள் சட்டத்திற்கு பயப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஒரு அரசை நாங்கள் கட்டியெழுப்புவோம். 

முன்னாள் ஐஜிபி, முன்னாள் கடற்படைத் தளபதி, சிறைச்சாலைகள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள குடிவரவு, சுங்க  உட்பட பல உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

முந்தைய அரசாங்கங்களால் ஆட்சி மாற்றங்களின் போது தடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளை விசாரிக்க புதிய CID குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

எங்கள் சட்டங்களின்படி ரூ. 2.6 மில்லியன் நிதி மோசடிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. 

இதன் அடிப்படையில் நமது கணக்கீடுகளை மேற்கொண்டால், சிலர் பல வாழ்நாள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றார்


லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக இலங்கை மாறும் - ஜனாதிபதி இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் எனஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.மாலைதீவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்கும் நிகழ்வில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படும்.  லஞ்சம் கொடுக்கவும், வாங்குவதற்கும் பயப்பட வேண்டும். மக்கள் சட்டத்திற்கு பயப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஒரு அரசை நாங்கள் கட்டியெழுப்புவோம். முன்னாள் ஐஜிபி, முன்னாள் கடற்படைத் தளபதி, சிறைச்சாலைகள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள குடிவரவு, சுங்க  உட்பட பல உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முந்தைய அரசாங்கங்களால் ஆட்சி மாற்றங்களின் போது தடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளை விசாரிக்க புதிய CID குழு நியமிக்கப்பட்டுள்ளது. எங்கள் சட்டங்களின்படி ரூ. 2.6 மில்லியன் நிதி மோசடிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் நமது கணக்கீடுகளை மேற்கொண்டால், சிலர் பல வாழ்நாள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றார்

Advertisement

Advertisement

Advertisement