• May 21 2025

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலைக்கு முன் போராட்டம்! கலகமடக்கும் பொலிஸார் களத்தில்

Chithra / May 8th 2025, 1:46 pm
image

 

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

குறித்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பெற்றோரின் போராட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள  பொலிஸார் தயாராகியுள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த போராட்டதால் டுப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர்  தெரிவிக்கின்றனர்.

எனவே அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக அமைதியான முறையில் கண்டனப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலைக்கு முன் போராட்டம் கலகமடக்கும் பொலிஸார் களத்தில்  கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.இந்நிலையில் பெற்றோரின் போராட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள  பொலிஸார் தயாராகியுள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.இந்த போராட்டதால் டுப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர்  தெரிவிக்கின்றனர்.எனவே அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இதேவேளை மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக அமைதியான முறையில் கண்டனப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement

Buy Now