• Jul 05 2025

தொழிற்கல்வியை தீர்க்கமான பாடமாக மாற்றவுள்ளதாக பிரதமர் ஹரினி அறிவிப்பு!

Thansita / Jul 5th 2025, 10:35 am
image

இலங்கையில் தொழிற்கல்விக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் அது நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய துறையாக மாற்றப்படும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜூலை 4ஆம் திகதி கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற "ஸ்ரம மெஹெயும" (உழைப்பு நடவடிக்கை) திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தொழிற்கல்வி நிறுவனங்களை தளமாக கொண்டு, நேர்த்தியான மற்றும் இழுபறியற்ற அமைப்பை கட்டமைப்பதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்: 

"தொழிற்கல்வியை மையமாக வைத்து பிரதி அமைச்சர் நலின் ஹேவகே  கருத்துப்படி, ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) இலங்கை முழுவதிலும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்தமைக்கு நான் நன்றி கூறுகிறேன். 

இதனை ஸ்ரம மெஹெயும   (உழைப்பு நடவடிக்கை) மூலமாக ஆரம்பித்து வைத்தபோதிலும், தொழிற்கல்வி துறை மீது கவனம் பெறுவதற்காகவும், இதன் முக்கியத்துவத்தை முழு நாட்டிற்கும் காண்பிப்பதற்காகவுமே நாம் இங்கு முயற்சி செய்கின்றோம்.

தொழிற்கல்வித் துறையே எதிர்காலத்தில் நாட்டின் தீர்க்கமான பாடமாக மாறப்போகிறது," என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தொழில்சார் உலகிற்குத் தேவையான மனிதவளத்தை கல்வி அமைச்சே உருவாக்கி வருகின்ற நிலையில், அதற்குரிய ஆற்றலை வழங்கும் முக்கியமான துறையாகவே தொழிற்கல்வி விளங்குகிறது என்றும், இது தொடர்ந்து புறக்கணிக்க முடியாத ஒரு துறையாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதிகாலையில் பல்கலைக்கழகத்தில் சேர முடியாதவர்களுக்கான மாற்று வழியென பொதுமக்கள் தொழில்நுட்பக் கல்வியை பார்க்கும் நிலை தவறானது என்றும், இது உண்மையில் நாட்டின் அபிவிருத்திக்கு கட்டாயமாக தேவையான, புத்திசாலித்தனமான நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொரு முடிவாகும்.

தொழிற்கல்வி கற்பதற்கு எடுக்கும் முடிவானது தற்செயலாக இருக்க முடியாது, அறியாமையினால் அல்லது இறுதி நேரத்தில் எடுக்கும் முடிவாகவும் இருக்க முடியாது. அது தன்னுடைய திறன், தன்னுடைய விருப்பம், உலகத்தை பற்றி தான் கொண்டுள்ள கருத்துக்கள், இந்த எண்ணக்கருக்கள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கும் மிகவும் முக்கியமான முடிவாக அமைய வேண்டும். 

"2026ஆம் ஆண்டு அமலுக்கு வரும் கல்விச் சீர்திருத்தத்தில்தான் தொழிற்கல்விக்கு தனிச்சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது" என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

கல்விச் சீர்திருத்தம் என்பது பாடத்திட்ட மாற்றத்திற்கு மேல் செல்லும் ஒரு பரந்த நோக்குடன் திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகும் என்றும், தொழிற்கல்வி பாடசாலைகளின் மூலமாகவே வழங்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

"இது அரசாங்கம் விரும்பும் மறுமலர்ச்சியுகத்திற்கு தேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்கும் வழி" என்றும், தொழிற்கல்வியை நாட்டின் அபிவிருத்திக்கான முக்கிய அஸ்திரமாக உயர்த்த அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே : 

"அரசின் கொள்கையான 'வளமான நாடு – அழகான வாழ்க்கை மூலம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதற்காக மாபெரும் சீர்திருத்தங்கள் இந்த காலகட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

அந்த மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்த, முதலில் இந்த இடங்கள் புதுப்பித்தல், நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு உள்ளாக வேண்டும்.

இளைஞர்களின், யுவதிகளினதும் மனப்பான்மைகளில் மேம்பாடு ஏற்பட வேண்டும். தற்போதைய இளைஞர்கள், யுவதிகள் தொழில்நுட்பத்துடன் முன்னால் வந்துள்ளனர். இருப்பினும், நிறுவனக் கட்டமைப்பானது பல மைல்களுக்குப் பின்னாலேயே இருந்து வருகின்றன.

ஆகையினால் நாம் இந்த நவீன இளைஞர்களுக்கு ஏற்ற நிறுவனச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அதனாலேயே இன்று இலங்கையில் 311 நிறுவனங்களில் பாரிய ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) முன்னெடுக்கப்படுகின்றது.

160,000க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து நாடு முழுவதிலும் தங்கள் நிறுவன அமைப்பை உருவாக்கும் பணியை இன்று ஆரம்பித்திருக்கின்றனர். இது இங்கேயே நின்றுவிடப்போவதில்லை. இந்தத் துறையின் மூலம் நாட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும்," எனத் தெரிவித்தார். 

இந்த விழாவில் மேலும் உரையாற்றிய தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க 

"தொழிற்பயிற்சி அளிக்கும் அரச நிறுவனங்களில் பல்வேறு பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன.

அவற்றை நாடெங்கும் உள்ள மாணவர்கள் கற்று வருகின்றனர். சில சமயங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூட இந்த நிறுவனங்களில் கல்வி பயிலுகிறார்கள்

. சில பயிற்சி நிறுவனங்களில் மாணவர் பற்றாக்குறையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு எமது கல்வி முறையில் காணப்படுகின்ற குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்கலாம் 

தொழிலாளர் அமைச்சின் நிர்வாகத்திலேயே இந்த பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. எதிர்காலத்தில் அந்த நிறுவனங்களையும் பலப்படுத்தி பயிற்சி அளிக்க தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள இருக்கின்றோம்," எனத் தெரிவித்தார். 

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கம்பஹா நகர பிதா, மாவட்டச் செயலாளர், கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் பி.எம்.கே. கோமஸ் ஆகியோரும், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

தொழிற்கல்வியை தீர்க்கமான பாடமாக மாற்றவுள்ளதாக பிரதமர் ஹரினி அறிவிப்பு இலங்கையில் தொழிற்கல்விக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் அது நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய துறையாக மாற்றப்படும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.ஜூலை 4ஆம் திகதி கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற "ஸ்ரம மெஹெயும" (உழைப்பு நடவடிக்கை) திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தொழிற்கல்வி நிறுவனங்களை தளமாக கொண்டு, நேர்த்தியான மற்றும் இழுபறியற்ற அமைப்பை கட்டமைப்பதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்: "தொழிற்கல்வியை மையமாக வைத்து பிரதி அமைச்சர் நலின் ஹேவகே  கருத்துப்படி, ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) இலங்கை முழுவதிலும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்தமைக்கு நான் நன்றி கூறுகிறேன். இதனை ஸ்ரம மெஹெயும   (உழைப்பு நடவடிக்கை) மூலமாக ஆரம்பித்து வைத்தபோதிலும், தொழிற்கல்வி துறை மீது கவனம் பெறுவதற்காகவும், இதன் முக்கியத்துவத்தை முழு நாட்டிற்கும் காண்பிப்பதற்காகவுமே நாம் இங்கு முயற்சி செய்கின்றோம்.தொழிற்கல்வித் துறையே எதிர்காலத்தில் நாட்டின் தீர்க்கமான பாடமாக மாறப்போகிறது," என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.தொழில்சார் உலகிற்குத் தேவையான மனிதவளத்தை கல்வி அமைச்சே உருவாக்கி வருகின்ற நிலையில், அதற்குரிய ஆற்றலை வழங்கும் முக்கியமான துறையாகவே தொழிற்கல்வி விளங்குகிறது என்றும், இது தொடர்ந்து புறக்கணிக்க முடியாத ஒரு துறையாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.அதிகாலையில் பல்கலைக்கழகத்தில் சேர முடியாதவர்களுக்கான மாற்று வழியென பொதுமக்கள் தொழில்நுட்பக் கல்வியை பார்க்கும் நிலை தவறானது என்றும், இது உண்மையில் நாட்டின் அபிவிருத்திக்கு கட்டாயமாக தேவையான, புத்திசாலித்தனமான நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொரு முடிவாகும்.தொழிற்கல்வி கற்பதற்கு எடுக்கும் முடிவானது தற்செயலாக இருக்க முடியாது, அறியாமையினால் அல்லது இறுதி நேரத்தில் எடுக்கும் முடிவாகவும் இருக்க முடியாது. அது தன்னுடைய திறன், தன்னுடைய விருப்பம், உலகத்தை பற்றி தான் கொண்டுள்ள கருத்துக்கள், இந்த எண்ணக்கருக்கள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கும் மிகவும் முக்கியமான முடிவாக அமைய வேண்டும். "2026ஆம் ஆண்டு அமலுக்கு வரும் கல்விச் சீர்திருத்தத்தில்தான் தொழிற்கல்விக்கு தனிச்சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது" என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்விச் சீர்திருத்தம் என்பது பாடத்திட்ட மாற்றத்திற்கு மேல் செல்லும் ஒரு பரந்த நோக்குடன் திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகும் என்றும், தொழிற்கல்வி பாடசாலைகளின் மூலமாகவே வழங்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்."இது அரசாங்கம் விரும்பும் மறுமலர்ச்சியுகத்திற்கு தேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்கும் வழி" என்றும், தொழிற்கல்வியை நாட்டின் அபிவிருத்திக்கான முக்கிய அஸ்திரமாக உயர்த்த அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே : "அரசின் கொள்கையான 'வளமான நாடு – அழகான வாழ்க்கை மூலம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதற்காக மாபெரும் சீர்திருத்தங்கள் இந்த காலகட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்த, முதலில் இந்த இடங்கள் புதுப்பித்தல், நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு உள்ளாக வேண்டும். இளைஞர்களின், யுவதிகளினதும் மனப்பான்மைகளில் மேம்பாடு ஏற்பட வேண்டும். தற்போதைய இளைஞர்கள், யுவதிகள் தொழில்நுட்பத்துடன் முன்னால் வந்துள்ளனர். இருப்பினும், நிறுவனக் கட்டமைப்பானது பல மைல்களுக்குப் பின்னாலேயே இருந்து வருகின்றன. ஆகையினால் நாம் இந்த நவீன இளைஞர்களுக்கு ஏற்ற நிறுவனச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அதனாலேயே இன்று இலங்கையில் 311 நிறுவனங்களில் பாரிய ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) முன்னெடுக்கப்படுகின்றது. 160,000க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து நாடு முழுவதிலும் தங்கள் நிறுவன அமைப்பை உருவாக்கும் பணியை இன்று ஆரம்பித்திருக்கின்றனர். இது இங்கேயே நின்றுவிடப்போவதில்லை. இந்தத் துறையின் மூலம் நாட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும்," எனத் தெரிவித்தார். இந்த விழாவில் மேலும் உரையாற்றிய தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க "தொழிற்பயிற்சி அளிக்கும் அரச நிறுவனங்களில் பல்வேறு பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றை நாடெங்கும் உள்ள மாணவர்கள் கற்று வருகின்றனர். சில சமயங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூட இந்த நிறுவனங்களில் கல்வி பயிலுகிறார்கள். சில பயிற்சி நிறுவனங்களில் மாணவர் பற்றாக்குறையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு எமது கல்வி முறையில் காணப்படுகின்ற குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்கலாம் தொழிலாளர் அமைச்சின் நிர்வாகத்திலேயே இந்த பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. எதிர்காலத்தில் அந்த நிறுவனங்களையும் பலப்படுத்தி பயிற்சி அளிக்க தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள இருக்கின்றோம்," எனத் தெரிவித்தார். கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கம்பஹா நகர பிதா, மாவட்டச் செயலாளர், கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் பி.எம்.கே. கோமஸ் ஆகியோரும், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement