நீர்கொழும்பில் உள்ள டங்கல்பிட்டி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குறித்து கிடைத்த தகவலையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை லெல்லாமா பாலம் அருகே சோதனைக்காக நிறுத்துமாறு உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் உத்தரவுகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளனர். அவர்களைப் பொலிஸார் துரத்திச் சென்ற குறித்த மோட்டார் சைக்கிள் லொறியில் மோதியுள்ளது.
விபத்து நிகழ்ந்த வேளை ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றொருவர் தப்பிச் சென்றதால் மீண்டும் பொலிஸார் அவரைத் துரத்திச் சென்றனர்.
அதன்போதே குறித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சந்தேகநபர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் நீர்கொழும்பில் உள்ள டங்கல்பிட்டி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் குறித்து கிடைத்த தகவலையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை லெல்லாமா பாலம் அருகே சோதனைக்காக நிறுத்துமாறு உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாரின் உத்தரவுகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளனர். அவர்களைப் பொலிஸார் துரத்திச் சென்ற குறித்த மோட்டார் சைக்கிள் லொறியில் மோதியுள்ளது.விபத்து நிகழ்ந்த வேளை ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றொருவர் தப்பிச் சென்றதால் மீண்டும் பொலிஸார் அவரைத் துரத்திச் சென்றனர். அதன்போதே குறித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சந்தேகநபர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.