• Dec 28 2025

பாதிக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக நத்தார் அலங்காரம் செய்யவில்லை-மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் !

dileesiya / Dec 27th 2025, 4:11 pm
image

கிறிஸ்மஸ் பண்டிகையினையொட்டி மட்டக்களப்பு நகரில் அலங்கார வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்படாமை தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை முற்றாக மறுப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர்  கருத்து தெரிவித்ததாவது ,

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இதன் காரணமாக 2.2மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அந்த வகையில் நாங்கள் மாநகரசபையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கவேண்டும் என்ற சிந்தனையுடன் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக பொதுமக்களிடம் பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்கியிருந்தோம்.

இந்த அனர்த்ததினால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது அனுதாபங்களை தெரிவிக்கும் நோக்குடனும் கேளிக்கைகள் கொண்டாட்டங்களை செய்வதில்லையென்ற தீர்மானத்தினை எடுத்திருந்தோம்.

இதன் அடிப்படையில் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூட அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக இந்த நத்தார் பண்டிகை காலத்தில் வீணான களியாட்டங்கள்,வீண்செலவுகளை செய்யாமல் அவற்றினை பாதிக்கப்பட்ட மக்கள் எழுச்சிக்கு உதவுமாறு கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

அந்த கோரிக்கையினையும் கவனத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரசபையில் ஜேசுபாலகன் பிறப்பான நத்தார் பண்டிகை,புதுவருடப்பிறப்பு என்பனவற்றினை இம்முறை மாத்திரம் செய்வதில்லையென்ற தீர்மானத்தினை எடுத்திருந்தோம்.

ஒவ்வொரு முறையும் இவற்றினை கோலாகலமாக மாநகரசபை செய்து வருகின்ற நிலையிலே இம்முறை பாதிப்புக்குள்ளான மக்களின் துயிரில் பங்குகொள்கின்றோம் என்ற எண்ணத்துடன் இந்த தீர்மானத்தினை எடுத்திருந்தோம் என மேலும் தெரிவத்திருந்தார்.


பாதிக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக நத்தார் அலங்காரம் செய்யவில்லை-மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் கிறிஸ்மஸ் பண்டிகையினையொட்டி மட்டக்களப்பு நகரில் அலங்கார வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்படாமை தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை முற்றாக மறுப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது அவர்  கருத்து தெரிவித்ததாவது ,அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இதன் காரணமாக 2.2மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.அந்த வகையில் நாங்கள் மாநகரசபையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கவேண்டும் என்ற சிந்தனையுடன் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக பொதுமக்களிடம் பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்கியிருந்தோம்.இந்த அனர்த்ததினால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது அனுதாபங்களை தெரிவிக்கும் நோக்குடனும் கேளிக்கைகள் கொண்டாட்டங்களை செய்வதில்லையென்ற தீர்மானத்தினை எடுத்திருந்தோம்.இதன் அடிப்படையில் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூட அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக இந்த நத்தார் பண்டிகை காலத்தில் வீணான களியாட்டங்கள்,வீண்செலவுகளை செய்யாமல் அவற்றினை பாதிக்கப்பட்ட மக்கள் எழுச்சிக்கு உதவுமாறு கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.அந்த கோரிக்கையினையும் கவனத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரசபையில் ஜேசுபாலகன் பிறப்பான நத்தார் பண்டிகை,புதுவருடப்பிறப்பு என்பனவற்றினை இம்முறை மாத்திரம் செய்வதில்லையென்ற தீர்மானத்தினை எடுத்திருந்தோம்.ஒவ்வொரு முறையும் இவற்றினை கோலாகலமாக மாநகரசபை செய்து வருகின்ற நிலையிலே இம்முறை பாதிப்புக்குள்ளான மக்களின் துயிரில் பங்குகொள்கின்றோம் என்ற எண்ணத்துடன் இந்த தீர்மானத்தினை எடுத்திருந்தோம் என மேலும் தெரிவத்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement