• Jul 21 2025

நடுக்கடலில் தீப்பற்றிய சொகுசு கப்பல்; உயிரைக் காக்க கடலில் குதித்த பயணிகள்!

shanuja / Jul 20th 2025, 10:14 pm
image

இந்தோனேஷியாவில் 280 பேருடன் பயணித்த சொகுசுக்கப்பல் ஒன்று தீடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளாகிய சம்பவம் காணொளியாக வெளிவந்து  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தோனேஷியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள டாலிஸ் தீவுக்கு அருகில்  பயணித்துக் கொண்டிருந்த கே.எம். பார்சிலோனா வி.ஏ என்ற பயணிகள் சொகுசுக் கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியது.   


டாலிஸ் தீவுக்கு அருகில்  இன்று பிற்பகல் 1 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் தீடீரென தீ பற்றி எரிந்துள்ளது. தீ விபத்தையடுத்து கப்பலில் பயணித்த பயணிகள் செய்வதறியாது திண்டாடினர். 


பற்றியெரிந்த கப்பலுக்குள் இருந்த பயணிகள் பலர் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கடலில் குதித்துள்ளனர். பயணிகள் கடலில் குதிக்கும் திகில் காட்சிகள் காணொளிகளில் வெளிவந்து மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


280 பயணிகளுடன் சென்ற கப்பல் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சுமார் 150 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பலில் பயணித்த மிகுதிப் பயணிகளை  மீட்கும்  பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் தீப்பற்றிய சொகுசு கப்பல்; உயிரைக் காக்க கடலில் குதித்த பயணிகள் இந்தோனேஷியாவில் 280 பேருடன் பயணித்த சொகுசுக்கப்பல் ஒன்று தீடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளாகிய சம்பவம் காணொளியாக வெளிவந்து  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள டாலிஸ் தீவுக்கு அருகில்  பயணித்துக் கொண்டிருந்த கே.எம். பார்சிலோனா வி.ஏ என்ற பயணிகள் சொகுசுக் கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியது.   டாலிஸ் தீவுக்கு அருகில்  இன்று பிற்பகல் 1 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் தீடீரென தீ பற்றி எரிந்துள்ளது. தீ விபத்தையடுத்து கப்பலில் பயணித்த பயணிகள் செய்வதறியாது திண்டாடினர். பற்றியெரிந்த கப்பலுக்குள் இருந்த பயணிகள் பலர் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கடலில் குதித்துள்ளனர். பயணிகள் கடலில் குதிக்கும் திகில் காட்சிகள் காணொளிகளில் வெளிவந்து மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 280 பயணிகளுடன் சென்ற கப்பல் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சுமார் 150 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பலில் பயணித்த மிகுதிப் பயணிகளை  மீட்கும்  பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement