தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் நாளை (21) 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியலால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும். அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும்.
அதேவேளை மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இடைக்கிடையில் மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையில் மணிக்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
75 மில்லிமீற்றர் அளவில் நாளை பலத்த மழை தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் நாளை (21) 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியலால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும். அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும். அதேவேளை மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இடைக்கிடையில் மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையில் மணிக்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.