• Sep 07 2025

மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர்; மற்றுமொரு வாகனத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்

shanuja / Sep 6th 2025, 11:35 pm
image

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர் மற்றுமொரு வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  


இந்த விபத்துச் சம்பவம் புதுக்குடியிருப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இன்று மாலை 7 மணி அளவில் சம்பவித்துள்ளது. 


யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வீதியை குறுக்கறுத்து செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியது. 


இதன்போது  மோட்டார் சைக்கிளில் தூக்கி வீசப்பட்ட நபர் மீது வீதியால் பயணித்த மற்றுமொரு வாகனம் ஏறியதில்  ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். 


புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் சானுசன் என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 


அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்  தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  


உயிரிழந்தவரின்  சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 


விபத்து  தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர்; மற்றுமொரு வாகனத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர் மற்றுமொரு வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்துச் சம்பவம் புதுக்குடியிருப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இன்று மாலை 7 மணி அளவில் சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வீதியை குறுக்கறுத்து செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியது. இதன்போது  மோட்டார் சைக்கிளில் தூக்கி வீசப்பட்ட நபர் மீது வீதியால் பயணித்த மற்றுமொரு வாகனம் ஏறியதில்  ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் சானுசன் என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்  தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  உயிரிழந்தவரின்  சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. விபத்து  தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Advertisement

Advertisement

Advertisement