• Sep 06 2025

பாலியல் துஸ்பிரயோக வழக்கு; சகோதரர்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான தண்டனை

Aathira / Sep 6th 2025, 1:37 pm
image

மன்னார் மேல் நீதிமன்றத்தில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பை நீதிபதி மிஹால் வழங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் நெருக்கடியான நிலை, மற்றும் இவ்வாறான குற்றங்கள் மீண்டும் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 

7 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு மேலாக, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000/- நட்டஈட்டு தொகையும் வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் சகோதரர் ஒருவருக்கு, வயது குறைந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய ஒத்தாசை புரிந்தமைக்காகவே இரண்டாம் நபருக்கு அதே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில் வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் மற்றும் சிவஸ்கந்தஶ்ரீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தி இருந்தனர்.

வழக்கு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துஸ்பிரயோக வழக்கு; சகோதரர்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான தண்டனை மன்னார் மேல் நீதிமன்றத்தில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதி மிஹால் வழங்கியுள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமியின் நெருக்கடியான நிலை, மற்றும் இவ்வாறான குற்றங்கள் மீண்டும் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 7 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு மேலாக, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000/- நட்டஈட்டு தொகையும் வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.இதில் சகோதரர் ஒருவருக்கு, வயது குறைந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய ஒத்தாசை புரிந்தமைக்காகவே இரண்டாம் நபருக்கு அதே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இதில் வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் மற்றும் சிவஸ்கந்தஶ்ரீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தி இருந்தனர்.வழக்கு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement