• Sep 07 2025

போராட்டம் இரண்டு வருடங்களை கடந்தும் இதுவரையில் தீர்வில்லை; மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தெரிவிப்பு!

shanuja / Sep 6th 2025, 10:14 pm
image

மேய்ச்சல் தரைக்காக இரண்டு வருடங்களைக் கடந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமக்கான தீர்வு இதுவரையில் கிடைக்கவில்லை என்று மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  


மட்டக்களப்பு - சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்ட இடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இதனைத் தெரிவித்துள்ளனர். 


இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 


மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட மூவாயிரத்து இருபத்து ஐந்து ஹெக்டயர்  இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஒவ்வொரு அரசாங்கங்களும் தருவோம் தருவோம் எனக்கூறி வந்தனரே தவிர மேய்ச்சல் தரைக்கான ஏக்கரை வழங்கவில்லை. 


இரண்டு வருடத்திற்கான பூர்த்தியை முன்னிட்ட எங்களுடைய போராட்டம் அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும் என நினைக்கின்றோம். 


கால்நடைகளினால் நாங்கள் மட்டும் பயனடைவது அல்ல. அரசாங்கத்திற்கும் இதனால் வருமானம் வந்து கொண்டு தான் இருக்கின்றது. எங்களுடைய கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையினை ஒவ்வொரு அரசாங்கமும் மாறி மாறி தருவதாகக் கூறி இந்தப் புதிய அரசாங்கமும் பெற்று தருவார்கள் என நம்பி கொண்டிருக்கின்றோம். 


இந்த நிலையில் இந்த இரண்டு வருட பூர்த்தியை நாங்கள் செய்வதற்கு முடிவு செய்துள்ளோம்.  ஆகவே இந்த இரண்டு வருட பூர்த்தியில் ஜனாதிபதி எங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

போராட்டம் இரண்டு வருடங்களை கடந்தும் இதுவரையில் தீர்வில்லை; மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தெரிவிப்பு மேய்ச்சல் தரைக்காக இரண்டு வருடங்களைக் கடந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமக்கான தீர்வு இதுவரையில் கிடைக்கவில்லை என்று மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  மட்டக்களப்பு - சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்ட இடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இதனைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட மூவாயிரத்து இருபத்து ஐந்து ஹெக்டயர்  இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஒவ்வொரு அரசாங்கங்களும் தருவோம் தருவோம் எனக்கூறி வந்தனரே தவிர மேய்ச்சல் தரைக்கான ஏக்கரை வழங்கவில்லை. இரண்டு வருடத்திற்கான பூர்த்தியை முன்னிட்ட எங்களுடைய போராட்டம் அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும் என நினைக்கின்றோம். கால்நடைகளினால் நாங்கள் மட்டும் பயனடைவது அல்ல. அரசாங்கத்திற்கும் இதனால் வருமானம் வந்து கொண்டு தான் இருக்கின்றது. எங்களுடைய கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையினை ஒவ்வொரு அரசாங்கமும் மாறி மாறி தருவதாகக் கூறி இந்தப் புதிய அரசாங்கமும் பெற்று தருவார்கள் என நம்பி கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் இந்த இரண்டு வருட பூர்த்தியை நாங்கள் செய்வதற்கு முடிவு செய்துள்ளோம்.  ஆகவே இந்த இரண்டு வருட பூர்த்தியில் ஜனாதிபதி எங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement