ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பால் முத்துநகர் விவசாயிகள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு பதற்றமான நிலையும் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், அதிகாரிகள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோர் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே மூத்த பொலிஸ் அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்
முத்துநகரில் 1972ஆம் ஆண்டு முதல் நாம் விவசாயம் செய்து வருகிறோம். 352 குடும்பங்கள், 5000 பேரின் வாழ்வாதாரம் இந்த நிலங்களிலேயே தங்கியுள்ளன.
நாங்கள் இது தொடர்பில் திருகோணமலையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து பிரச்சினை தொடர்பில் தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிட்டவில்லை என்றனர்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போராட்டத்தில் குதித்த முத்துநகர் விவசாயிகள்; பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்ற நிலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பால் முத்துநகர் விவசாயிகள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு பதற்றமான நிலையும் ஏற்பட்டுள்ளது. திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இரண்டு வாரங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், அதிகாரிகள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோர் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே மூத்த பொலிஸ் அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில் முத்துநகரில் 1972ஆம் ஆண்டு முதல் நாம் விவசாயம் செய்து வருகிறோம். 352 குடும்பங்கள், 5000 பேரின் வாழ்வாதாரம் இந்த நிலங்களிலேயே தங்கியுள்ளன.நாங்கள் இது தொடர்பில் திருகோணமலையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து பிரச்சினை தொடர்பில் தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிட்டவில்லை என்றனர்