• Dec 28 2025

கொழும்பில் அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விடுதி! சிக்கிய 10 வெளிநாட்டு பெண்கள்

Chithra / Dec 28th 2025, 1:21 pm
image

 

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன் 10 வெளிநாட்டுப் பெண்களை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது குறித்த விடுதியிலிருந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த பத்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, கொள்ளுப்பிட்டி - காலி வீதியில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த இடத்தில் இருந்த மூன்று வியட்நாம் பெண்கள், ஆறு தாய்லாந்து பெண்கள் மற்றும் ஒரு சீனப் பெண் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் 25 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்..


இந்த சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விடுதி சிக்கிய 10 வெளிநாட்டு பெண்கள்  கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன் 10 வெளிநாட்டுப் பெண்களை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது குறித்த விடுதியிலிருந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த பத்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, கொள்ளுப்பிட்டி - காலி வீதியில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இடத்தில் இருந்த மூன்று வியட்நாம் பெண்கள், ஆறு தாய்லாந்து பெண்கள் மற்றும் ஒரு சீனப் பெண் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் 25 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement