• Aug 19 2025

காருடன் நேருக்கு நேர் மோதி நொருங்கிய மற்றுமொரு கார்; ஒருவர் காயம்! முல்லையில் விபத்து

shanuja / Aug 18th 2025, 1:43 pm
image

கார் ஒன்று மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதித் தள்ளி விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

இந்த விபத்துச் சம்பவம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இன்று சம்பவித்துள்ளது.


விபத்துத் தொடர்பில் தெரிய வருகையில், 

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த கார் ஒன்று, உடையார்கட்டுப் பகுதி வீதியில் திரும்ப முற்பட்ட போது மற்றொரு காருடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் ஒரு காரின் முன்புறம் முழுவதுமாக நொருங்கியுள்ளது. மற்றைய காரும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 


இதில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காருடன் நேருக்கு நேர் மோதி நொருங்கிய மற்றுமொரு கார்; ஒருவர் காயம் முல்லையில் விபத்து கார் ஒன்று மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதித் தள்ளி விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இந்த விபத்துச் சம்பவம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இன்று சம்பவித்துள்ளது.விபத்துத் தொடர்பில் தெரிய வருகையில், புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த கார் ஒன்று, உடையார்கட்டுப் பகுதி வீதியில் திரும்ப முற்பட்ட போது மற்றொரு காருடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் ஒரு காரின் முன்புறம் முழுவதுமாக நொருங்கியுள்ளது. மற்றைய காரும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இதில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement