ஆண்டுதோறும் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு, அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இந்த சவாலை நடைமுறைப்படுத்த முடியுமானால் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆண்டுதோறும் ஈட்டலாம்.
இதற்கேற்ற வகையில் சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட பணியாளர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு, மேலதிகமாக பயிற்றப்பட்ட 8 லட்சம் நானாவித பணியாளர்களின் சேவை அவசியம்.
சர்வதேச தரத்தை கொண்ட பயிற்சிகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்த அரசாங்கம் ஆண்டுதோறும் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு, அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.இந்த சவாலை நடைமுறைப்படுத்த முடியுமானால் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆண்டுதோறும் ஈட்டலாம்.இதற்கேற்ற வகையில் சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட பணியாளர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கு, மேலதிகமாக பயிற்றப்பட்ட 8 லட்சம் நானாவித பணியாளர்களின் சேவை அவசியம்.சர்வதேச தரத்தை கொண்ட பயிற்சிகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.