• Sep 06 2025

உயிர்காப்புக்கு ரோன் தொழிநுட்பம் அவசியம்; தென்கிழக்கு பல்கலையில் விழிப்புணர்வு பயிற்சி

Aathira / Sep 5th 2025, 9:28 pm
image

அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் ரோன் (Drone) தொழிநுட்பத்தை, உயிர்காப்பு நோக்கில் பயன்படுத்துவது தொடர்பான ஒரு நாள் பயிற்சிநெறி நிகழ்வு இன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வை அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் மற்றும் சம்மாந்துறை அல்-உஸ்வா உயிர்காப்பு நிலையம் இணைந்து ஏற்பாடு செய்தன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் மற்றும் புவியியல் துறைத்தலைவர் கலாநிதி ஐ.எல். முகம்மட் சாகிர் முன்னிலையாகி நிகழ்வை நடத்தினர்.

குறித்த பயிற்சிநெறியில் அனர்த்தங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்கும், 

மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள ரோன் தொழிநுட்பத்தின் பங்கு பற்றியும் 

புதிய தலைமுறையினர் இந்த தொழிநுட்பங்களை கையாளும் திறனுடன் உருவாக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ரோன் இயந்திரங்களின் செயல்பாடு,  தரவுகளைத் திரட்டும் முறைகள், மெய்நிகர் வரைபட தயாரிப்பு, மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அவற்றின் முக்கிய பங்கு உள்ளிட்ட விடயங்கள் விளக்கப்பட்டன.

இந்த நிகழ்வு, எதிர்கால அனர்த்தங்களுக்கு தயாராக இருக்க உதவிக்கரம் நீட்டும் முக்கிய நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



உயிர்காப்புக்கு ரோன் தொழிநுட்பம் அவசியம்; தென்கிழக்கு பல்கலையில் விழிப்புணர்வு பயிற்சி அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் ரோன் (Drone) தொழிநுட்பத்தை, உயிர்காப்பு நோக்கில் பயன்படுத்துவது தொடர்பான ஒரு நாள் பயிற்சிநெறி நிகழ்வு இன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வை அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் மற்றும் சம்மாந்துறை அல்-உஸ்வா உயிர்காப்பு நிலையம் இணைந்து ஏற்பாடு செய்தன.தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் மற்றும் புவியியல் துறைத்தலைவர் கலாநிதி ஐ.எல். முகம்மட் சாகிர் முன்னிலையாகி நிகழ்வை நடத்தினர்.குறித்த பயிற்சிநெறியில் அனர்த்தங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்கும், மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள ரோன் தொழிநுட்பத்தின் பங்கு பற்றியும் புதிய தலைமுறையினர் இந்த தொழிநுட்பங்களை கையாளும் திறனுடன் உருவாக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.மேலும், ரோன் இயந்திரங்களின் செயல்பாடு,  தரவுகளைத் திரட்டும் முறைகள், மெய்நிகர் வரைபட தயாரிப்பு, மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அவற்றின் முக்கிய பங்கு உள்ளிட்ட விடயங்கள் விளக்கப்பட்டன.இந்த நிகழ்வு, எதிர்கால அனர்த்தங்களுக்கு தயாராக இருக்க உதவிக்கரம் நீட்டும் முக்கிய நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement