• Jan 10 2026

பரந்தன் இரசாயன தொழிற்சாலை குறித்து அரசின் திட்டம் - குவியும் வேலைவாய்ப்புக்கள்

Chithra / Sep 26th 2025, 10:50 am
image

பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், சோடா மற்றும் குளோரின் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

அதன்படி, பொது, தனியார் கூட்டுத் திட்டமான இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில், சோடா மற்றும் குளோரின் உற்பத்தி ஆலையை மீண்டும் ஆரம்பிப்பதன் சாத்தியப்பாடுகள் குறித்த ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமான பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், ஒதுக்கப்பட்ட 30 ஏக்கர் நிலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான முதலீட்டாளர்களைத் தேடும் நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதனூடான, சுமார் 95 நேரடி வேலை வாய்ப்புகளையும் சுமார் 2,000 மறைமுக வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.


பரந்தன் இரசாயன தொழிற்சாலை குறித்து அரசின் திட்டம் - குவியும் வேலைவாய்ப்புக்கள் பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், சோடா மற்றும் குளோரின் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொது, தனியார் கூட்டுத் திட்டமான இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில், சோடா மற்றும் குளோரின் உற்பத்தி ஆலையை மீண்டும் ஆரம்பிப்பதன் சாத்தியப்பாடுகள் குறித்த ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமான பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், ஒதுக்கப்பட்ட 30 ஏக்கர் நிலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான முதலீட்டாளர்களைத் தேடும் நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனூடான, சுமார் 95 நேரடி வேலை வாய்ப்புகளையும் சுமார் 2,000 மறைமுக வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement