• May 24 2025

முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது..!

Sharmi / May 23rd 2025, 11:00 am
image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (23) காலை பம்பலப்பிட்டியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தை ஹேவ்லாக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணிடம் தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளில், குறித்த துப்பாக்கி முன்னாள் அமைச்சருடையது என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (23) காலை பம்பலப்பிட்டியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.வெள்ளவத்தை ஹேவ்லாக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணிடம் தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முதற்கட்ட விசாரணைகளில், குறித்த துப்பாக்கி முன்னாள் அமைச்சருடையது என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement