• Dec 28 2025

கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் - இலங்கையில் துயரம்

Chithra / Dec 28th 2025, 10:09 am
image

 

ஹிக்கடுவை - நரிகமவில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை பதிவாகியுள்ளது.


பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 23 மற்றும் 20 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.


ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் ஏக்கநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் மிகிந்து, பண்டார மற்றும் திசாநாயக்க ஆகியோர், குறித்த தம்பதியினரை மீட்டு அடிப்படை முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.


இதேவேளை நேற்று, அஹுங்கல்லவில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட ரரஷ்ய சுற்றுலாப் பயணி  பாதுகாப்பாக மீட்க்கட்டுள்ளார்.


கடற்கரையில் பணியில் இருந்த பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் கப்பில, பிரியசாந்த, பொலிஸ் கான்ஸ்டபிள் லசந்த மற்றும் எரந்த ஆகியோர் குறித்த வெளிநாட்டவரை மீட்டு அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர்.


இந்த விபத்தில் சிக்கியவர் 39 வயதுடைய ரஷ்ய நாட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் - இலங்கையில் துயரம்  ஹிக்கடுவை - நரிகமவில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை பதிவாகியுள்ளது.பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 23 மற்றும் 20 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் ஏக்கநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் மிகிந்து, பண்டார மற்றும் திசாநாயக்க ஆகியோர், குறித்த தம்பதியினரை மீட்டு அடிப்படை முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.இதேவேளை நேற்று, அஹுங்கல்லவில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட ரரஷ்ய சுற்றுலாப் பயணி  பாதுகாப்பாக மீட்க்கட்டுள்ளார்.கடற்கரையில் பணியில் இருந்த பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் கப்பில, பிரியசாந்த, பொலிஸ் கான்ஸ்டபிள் லசந்த மற்றும் எரந்த ஆகியோர் குறித்த வெளிநாட்டவரை மீட்டு அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர்.இந்த விபத்தில் சிக்கியவர் 39 வயதுடைய ரஷ்ய நாட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement