• Jul 11 2025

மாற்றுத்திறனாளர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்

shanuja / Jul 10th 2025, 11:49 pm
image

மாற்றுத்திறனாளர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாக பிரித்தானியா அறம் Intiative அமைப்பினருக்கும், புதியவாழ்வு நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.


புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் சு.விஜயலாதன் தலமையில் ஆரம்பமான கலந்துரையாடலில் அறம் Intiative அமைப்பினர், புதியவாழ்வு நிறுவனத்தினருக்குமான கலந்துரையாடலில் புதியவாழ்வு நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், அங்கிருக்கின்ற வலுவிழப்புக்கு உள்ளான நபர்களுடைய உடல் உள நலன் தொடர்பாகவும், வலுவிழந்த நபர்களுக்கு தாெழில்நுட்ப ரீதியாக எவ்வாறான தொழில்வாய்ப்புக்களை வழங்கமுடியும் என்பது தொடர்பாகவும், இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.


குறித்த கலந்துரையாடலில் புதியவாழ்வு நிறுவனத்தின் தலைவர் சு.துஸ்யந்தன் உப தலைவர் ப.தர்சினி, உப செயலாளர் செ.கருணாகரன், இயக்குனர்சபை உறுப்பினர்கள் நிர்வாக உறுப்பினர்கள், பிரித்தானியா அறம் Intiative அமைப்பினர், வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உபதலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவினர், மற்றும் சமூக நலன்விரும்பிகளும் , மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் மாற்றுத்திறனாளர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாக பிரித்தானியா அறம் Intiative அமைப்பினருக்கும், புதியவாழ்வு நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் சு.விஜயலாதன் தலமையில் ஆரம்பமான கலந்துரையாடலில் அறம் Intiative அமைப்பினர், புதியவாழ்வு நிறுவனத்தினருக்குமான கலந்துரையாடலில் புதியவாழ்வு நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், அங்கிருக்கின்ற வலுவிழப்புக்கு உள்ளான நபர்களுடைய உடல் உள நலன் தொடர்பாகவும், வலுவிழந்த நபர்களுக்கு தாெழில்நுட்ப ரீதியாக எவ்வாறான தொழில்வாய்ப்புக்களை வழங்கமுடியும் என்பது தொடர்பாகவும், இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. குறித்த கலந்துரையாடலில் புதியவாழ்வு நிறுவனத்தின் தலைவர் சு.துஸ்யந்தன் உப தலைவர் ப.தர்சினி, உப செயலாளர் செ.கருணாகரன், இயக்குனர்சபை உறுப்பினர்கள் நிர்வாக உறுப்பினர்கள், பிரித்தானியா அறம் Intiative அமைப்பினர், வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உபதலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவினர், மற்றும் சமூக நலன்விரும்பிகளும் , மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement