• Jul 14 2025

புதிய டிஜிட்டல் கருவிகளின் ஒத்துழைப்பை வழங்குவது குறித்து பிரதமருக்கும் கேட்ஸ் அறக்கட்டளைக்கும் இடையில் ஆராய்வு

Chithra / Jul 13th 2025, 11:54 am
image


அமெரிக்க கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையேயான சந்திப்பு நேற்றுமுன்தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் கலாநிதி கிறிஸ் எலாயஸ், இது தனது இலங்கைக்கான முதல் விஜயம் என்றும், பாராளுமன்றத்தில் இந்த முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்க அழைப்பு விடுத்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும், இந்நாட்டின் சிறுவர்களினதும் பெண்களினதும் ஊட்டச்சத்துத் தேவைகளை மேம்படுத்துதல், 

விவசாயத் துறையை மேம்படுத்துவதில் புதிய டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமது ஒத்துழைப்பை வழங்கக்கூடிய சாத்தியப்பாட்டைப் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

சிறுவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாடசாலைகளில் மதிய உணவு வழங்குதல் தொடர்பான அரசாங்க திட்டங்கள் குறித்து கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்திய பிரதமர், இந்த நாட்டின் சிறுவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கேட்ஸ் அறக்கட்டளையினால் வழங்கக்கூடிய உச்சக்கட்ட ஆதரவை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் புதிய கல்வி முறையில் டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக கற்பித்தல், கற்றல், மதிப்பீடு மற்றும் கல்வி நிர்வாகம் ஆகியவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நிறுவப்பட்டிருக்கும் டிஜிட்டல் கல்விப் பணிக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பிரதமர், கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தார்.

இதன்போது, கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகள், கல்விச் சீர்திருத்தம் மற்றும் பணிக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒத்துழைப்பினை வழங்கக்கூடிய தரப்புகளின் பங்களிப்பினைப் பெற்றுத் தருவதாக பிரதமருக்கு உறுதியளித்தனர்.


புதிய டிஜிட்டல் கருவிகளின் ஒத்துழைப்பை வழங்குவது குறித்து பிரதமருக்கும் கேட்ஸ் அறக்கட்டளைக்கும் இடையில் ஆராய்வு அமெரிக்க கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையேயான சந்திப்பு நேற்றுமுன்தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.இச்சந்திப்பின்போது, கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் கலாநிதி கிறிஸ் எலாயஸ், இது தனது இலங்கைக்கான முதல் விஜயம் என்றும், பாராளுமன்றத்தில் இந்த முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்க அழைப்பு விடுத்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும், இந்நாட்டின் சிறுவர்களினதும் பெண்களினதும் ஊட்டச்சத்துத் தேவைகளை மேம்படுத்துதல், விவசாயத் துறையை மேம்படுத்துவதில் புதிய டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமது ஒத்துழைப்பை வழங்கக்கூடிய சாத்தியப்பாட்டைப் பற்றியும் தெளிவுபடுத்தினார்.சிறுவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாடசாலைகளில் மதிய உணவு வழங்குதல் தொடர்பான அரசாங்க திட்டங்கள் குறித்து கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்திய பிரதமர், இந்த நாட்டின் சிறுவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கேட்ஸ் அறக்கட்டளையினால் வழங்கக்கூடிய உச்சக்கட்ட ஆதரவை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், நாட்டின் புதிய கல்வி முறையில் டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக கற்பித்தல், கற்றல், மதிப்பீடு மற்றும் கல்வி நிர்வாகம் ஆகியவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நிறுவப்பட்டிருக்கும் டிஜிட்டல் கல்விப் பணிக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பிரதமர், கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தார்.இதன்போது, கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகள், கல்விச் சீர்திருத்தம் மற்றும் பணிக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒத்துழைப்பினை வழங்கக்கூடிய தரப்புகளின் பங்களிப்பினைப் பெற்றுத் தருவதாக பிரதமருக்கு உறுதியளித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement