கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் பாதீட்டுத் திட்டம் தயாரிப்பதற்கான செயல்முறையை கொழும்பு முதல்வர் விராய் கேலி பல்தசார் அறிவித்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பின் போது பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதி இரண்டாவது வாசிப்புக்கு மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பாதீடு வெறும் புள்ளிவிபரங்களின் தொகுப்பு மட்டுமல்ல, சபையின் செயல்திறனைப் பிரதிபலிக்கும் ஆவணம் மற்றும் வரவிருக்கும் ஆண்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் ஆவணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 22 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், பாதீடு தோல்வியடைந்த போதிலும், தமது நிர்வாகம் வெளிப்படையான மற்றும் மக்கள் சார்ந்த பாதீட்டை வழங்குவதில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் பாதீடு: 31 இல் இரண்டாவது வாசிப்புக்கு சமர்ப்பிக்க முதல்வர் தீர்மானம் கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் பாதீட்டுத் திட்டம் தயாரிப்பதற்கான செயல்முறையை கொழும்பு முதல்வர் விராய் கேலி பல்தசார் அறிவித்துள்ளார். கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பின் போது பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதி இரண்டாவது வாசிப்புக்கு மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பாதீடு வெறும் புள்ளிவிபரங்களின் தொகுப்பு மட்டுமல்ல, சபையின் செயல்திறனைப் பிரதிபலிக்கும் ஆவணம் மற்றும் வரவிருக்கும் ஆண்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் ஆவணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 22 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், பாதீடு தோல்வியடைந்த போதிலும், தமது நிர்வாகம் வெளிப்படையான மற்றும் மக்கள் சார்ந்த பாதீட்டை வழங்குவதில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.