• May 02 2025

உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் யாழில் பூர்த்தி – தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பிரதீபன் தெரிவிப்பு!

Thansita / May 1st 2025, 4:13 pm
image

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகள் தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில் -

யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன. அதில் ஒரு மாநகரசபை 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன.

குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பிரதேச செயலாளர்களுக்கும் கிராம அலுவலர்களுக்கும் இந்த வாக்களிப்பு நிலையங்களை தயார்ப்படுத்தவதற்கான முழுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேநேரம் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். 

அத்துடன் தேர்தல் கடமைகளுக்காக 6 ஆயிரத்து 320 அதிகாரிகளம் 1048 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையாற்றவுள்ளனர்.

மே மாதம் 05 திகதி காலை 08 மணியில் இருந்து யாழ் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் பேருந்துகள் மூலமாக குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் யாழ் மாவட்டத்தில் 243 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துன் தேர்தலுக்கான இணைப்பு அலுவலகங்களாக பிரதேச செயலகங்கள் செயற்படுவதற்கான எற்பாடகள் மேற்கொள்ளப்பட்டள்ளன. குறிப்பாக பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் நிர்வாக கிராம அலுவலர்கள் என அங்கு ஒர இணைப்பு அலுவலகம் ஏற்பாட செய்யப்பட்டள்ளனர்.

இவற்றுக்கு மேலாக வட்டார ரீதியாக வாக்களிப்பு மேற்பார்வை செயற்பாட்டுக்காக மேலதிகமாக 243 இணைப்பு வட்டார உதவி தேர்தல் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த உதவி தேர்தால் அத்தியட்சகர்களே வாக்களிப்பு நிறைவுற்றதும் வாக்கெண்ணும் நிலையங்களின் பிரதம அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி சபைக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இலங்கை போக்குவரத்து சபைக்கான 50 பேருந்துக்களும், தனியார் பேருந்து 143 பேருந்துக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள இடம்பெயர்ந்தவர்களை ஏற்றி வருதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று தீவக போக்குவரத்து தொடர்பாக குறிப்பாக நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்கு கடற்படை தளபதியிடம் கலந்துரையாடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேநேரம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற தபால் மூல வாக்கெடுப்பு நிறைவுற்றுள்ள நிலையில் 292 அஞ்சல் வாக்கெடுப்பு நிலையங்களில் நடைபெற்றது. 

அந்தவகையில் யாழில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்காளர்களாக 21064 காணப்பட்டது. இதில் வாக்களிக்கப்பட்ட 20659 வாக்குச் சீட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 20 ஆயிரத்து 548 வாக்களிக்கப்பட்டதும் 111 வாக்களிக்கப்படாத வாக்குச் சீட்டுக்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் 405 வாக்குச் சீட்டுக்கள் எமக்கு கிடைக்கப்பெறவேண்டும். இவை நாளையதினம் எமது அலுவலகத்திற்கு கிடைக்கப்பெறும்

இவ்வாறு பெறப்பட்ட வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி சிரேஸ்ட தலைமைதாங்கும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவற்றை அவர்கள் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கொண்டுசென்று அன்றிரவு வாக்கெண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்

இதிலும் 50 இற்கும் குறைவான வாக்ககள் இருக்கின்ற பெட்டிகளில் அவை அந்த வாக்கெண்ணும் நிலையங்களில் மேதற்கொள்ளப்படும் அதேநேரம் 50 இற்கும் அதிகமான வாக்குகள் இருப்பின் அந்த வாக்கெண்ணும் நிலையத்தில் தனியான நிலையத்தில் அவை கணக்கெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாவட்டத்திலே 94 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 4 வன்முறை சம்பங்களும், 90 சட்ட விரோத மீறலும் இடம்பெற்றுள்ளதுடன் அவை தொடர்பில் தேர்தல் முறைப்பாட்டு அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளன எனவும் அவை தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் அலுவகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமதகவும் அவர் தெரிவித்துள்ளார்.


உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் யாழில் பூர்த்தி – தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பிரதீபன் தெரிவிப்பு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகள் தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில் -யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன. அதில் ஒரு மாநகரசபை 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன.குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றனர்.யாழ் மாவட்டத்தில் மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பிரதேச செயலாளர்களுக்கும் கிராம அலுவலர்களுக்கும் இந்த வாக்களிப்பு நிலையங்களை தயார்ப்படுத்தவதற்கான முழுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இதேநேரம் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். அத்துடன் தேர்தல் கடமைகளுக்காக 6 ஆயிரத்து 320 அதிகாரிகளம் 1048 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையாற்றவுள்ளனர்.மே மாதம் 05 திகதி காலை 08 மணியில் இருந்து யாழ் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் பேருந்துகள் மூலமாக குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதேநேரம் யாழ் மாவட்டத்தில் 243 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துன் தேர்தலுக்கான இணைப்பு அலுவலகங்களாக பிரதேச செயலகங்கள் செயற்படுவதற்கான எற்பாடகள் மேற்கொள்ளப்பட்டள்ளன. குறிப்பாக பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் நிர்வாக கிராம அலுவலர்கள் என அங்கு ஒர இணைப்பு அலுவலகம் ஏற்பாட செய்யப்பட்டள்ளனர்.இவற்றுக்கு மேலாக வட்டார ரீதியாக வாக்களிப்பு மேற்பார்வை செயற்பாட்டுக்காக மேலதிகமாக 243 இணைப்பு வட்டார உதவி தேர்தல் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அந்த உதவி தேர்தால் அத்தியட்சகர்களே வாக்களிப்பு நிறைவுற்றதும் வாக்கெண்ணும் நிலையங்களின் பிரதம அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.உள்ளூராட்சி சபைக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இலங்கை போக்குவரத்து சபைக்கான 50 பேருந்துக்களும், தனியார் பேருந்து 143 பேருந்துக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதேவேளை பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள இடம்பெயர்ந்தவர்களை ஏற்றி வருதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று தீவக போக்குவரத்து தொடர்பாக குறிப்பாக நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்கு கடற்படை தளபதியிடம் கலந்துரையாடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதேநேரம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற தபால் மூல வாக்கெடுப்பு நிறைவுற்றுள்ள நிலையில் 292 அஞ்சல் வாக்கெடுப்பு நிலையங்களில் நடைபெற்றது. அந்தவகையில் யாழில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்காளர்களாக 21064 காணப்பட்டது. இதில் வாக்களிக்கப்பட்ட 20659 வாக்குச் சீட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 20 ஆயிரத்து 548 வாக்களிக்கப்பட்டதும் 111 வாக்களிக்கப்படாத வாக்குச் சீட்டுக்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.மேலும் 405 வாக்குச் சீட்டுக்கள் எமக்கு கிடைக்கப்பெறவேண்டும். இவை நாளையதினம் எமது அலுவலகத்திற்கு கிடைக்கப்பெறும்இவ்வாறு பெறப்பட்ட வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி சிரேஸ்ட தலைமைதாங்கும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவற்றை அவர்கள் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கொண்டுசென்று அன்றிரவு வாக்கெண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்இதிலும் 50 இற்கும் குறைவான வாக்ககள் இருக்கின்ற பெட்டிகளில் அவை அந்த வாக்கெண்ணும் நிலையங்களில் மேதற்கொள்ளப்படும் அதேநேரம் 50 இற்கும் அதிகமான வாக்குகள் இருப்பின் அந்த வாக்கெண்ணும் நிலையத்தில் தனியான நிலையத்தில் அவை கணக்கெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாவட்டத்திலே 94 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 4 வன்முறை சம்பங்களும், 90 சட்ட விரோத மீறலும் இடம்பெற்றுள்ளதுடன் அவை தொடர்பில் தேர்தல் முறைப்பாட்டு அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளன எனவும் அவை தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் அலுவகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமதகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement