• Jul 19 2025

சாட்டி கடற்கரை சாதாளைகளை அகற்ற நடவக்கை - விரும்புவோர் பெற்றுக்கொள்ளவும் - தவிசாளர் அறிவிப்பு!

shanuja / Jul 18th 2025, 6:35 pm
image

சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்குடன்  வேலணை - சாட்டி கடற்கரையோரத்தில் காணப்படும் சாதாளைகளை அப்புறப்படுத்தி,  கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.


அத்துடன் குறித்த நடவடிக்கையின் போது அகற்றப்படும் சாதாளைகள், தாவரங்களுக்கான சிறந்த பசளையாக பயன்படுத்தக் கூடியதாக இருப்பதால் குறித்த சாதாளையை  மிகக்குறைந்த விலைக்கு பொதுமக்களிற்கு வழங்குவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  

எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னராக குறித்த செயற்பாட்டை பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளதால்  கடற்சாதாளைகளைப் பெற விரும்புவோர் வேலணை பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு உரிய கட்டணங்களைச் செலுத்தி தேவையான கடற்சாதாளைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாட்டி கடற்கரை சாதாளைகளை அகற்ற நடவக்கை - விரும்புவோர் பெற்றுக்கொள்ளவும் - தவிசாளர் அறிவிப்பு சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்குடன்  வேலணை - சாட்டி கடற்கரையோரத்தில் காணப்படும் சாதாளைகளை அப்புறப்படுத்தி,  கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.அத்துடன் குறித்த நடவடிக்கையின் போது அகற்றப்படும் சாதாளைகள், தாவரங்களுக்கான சிறந்த பசளையாக பயன்படுத்தக் கூடியதாக இருப்பதால் குறித்த சாதாளையை  மிகக்குறைந்த விலைக்கு பொதுமக்களிற்கு வழங்குவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னராக குறித்த செயற்பாட்டை பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளதால்  கடற்சாதாளைகளைப் பெற விரும்புவோர் வேலணை பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு உரிய கட்டணங்களைச் செலுத்தி தேவையான கடற்சாதாளைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement