வவுனியா நகரசபைக் குட்பட்ட காணியில் அமைந்துள்ள தலைமை பொலிஸ் நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் நவீன வியாபாரத் தொகுதி ஒன்று அமைக்கப்படும் என வவுனியா மாநகர சபையில் கோடரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு வேட்பாளர் சி.கிரிதரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீதியை புணரமைப்போம், வடிகால் அமைப்போம் கழிவகற்றுவோம் என்று அனைவரும் கூறுகின்றனர்.
இவையெல்லாம் அந்தந்த சபைகளின் கடமைகள். சபை இருந்தாலும் இல்லாவிடிலும் அது நடந்துகொண்டே இருக்கும். அவற்றை மேம்படுத்த வேண்டும்.
அதனை விட மக்களின் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது. தேவைகள் உள்ளன. நாங்கள் ஆட்சியமைத்தால் இந்த விடயங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், மக்களின் தீர்க்கமுடியாத பிரச்சனைகளை அடையாளம் கண்டு இலகுவாக்கி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
மேலும் வவுனியா நகரில் ஒரு நெருக்கடி நிலையும் ஏற்படுகின்றது. ஆனால் நகரசபைக்குட்பட்ட காணியில் வவுனியா தலைமை பொலிஸ்நிலையம் அமைந்துள்ளது.
நாங்கள் ஆட்சியமைத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் தலைமையகத்துடன் கலந்துரையாடி பொலிஸ் நிலையத்தை அந்த இடத்தில் இருந்து மாற்ற நடவடிக்கை எடுப்போம்.
அங்கு நவீன வியாபாரத்தொகுதி ஒன்றை அமைத்து ஒரு வாகனத் தரிப்பிடத்தையும் அமைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம்.
எனவே, ஆட்சி அதிகாரம் எமக்கு கிடைத்தால் இந்த திட்டங்களை செயல்படுத்துவோம் என்றார்.
மக்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டு இலகுவாக்கி தீர்ப்பதற்கு நடவடிக்கை. வவுனியா நகரசபைக் குட்பட்ட காணியில் அமைந்துள்ள தலைமை பொலிஸ் நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் நவீன வியாபாரத் தொகுதி ஒன்று அமைக்கப்படும் என வவுனியா மாநகர சபையில் கோடரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு வேட்பாளர் சி.கிரிதரன் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீதியை புணரமைப்போம், வடிகால் அமைப்போம் கழிவகற்றுவோம் என்று அனைவரும் கூறுகின்றனர். இவையெல்லாம் அந்தந்த சபைகளின் கடமைகள். சபை இருந்தாலும் இல்லாவிடிலும் அது நடந்துகொண்டே இருக்கும். அவற்றை மேம்படுத்த வேண்டும்.அதனை விட மக்களின் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது. தேவைகள் உள்ளன. நாங்கள் ஆட்சியமைத்தால் இந்த விடயங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், மக்களின் தீர்க்கமுடியாத பிரச்சனைகளை அடையாளம் கண்டு இலகுவாக்கி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.மேலும் வவுனியா நகரில் ஒரு நெருக்கடி நிலையும் ஏற்படுகின்றது. ஆனால் நகரசபைக்குட்பட்ட காணியில் வவுனியா தலைமை பொலிஸ்நிலையம் அமைந்துள்ளது.நாங்கள் ஆட்சியமைத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் தலைமையகத்துடன் கலந்துரையாடி பொலிஸ் நிலையத்தை அந்த இடத்தில் இருந்து மாற்ற நடவடிக்கை எடுப்போம்.அங்கு நவீன வியாபாரத்தொகுதி ஒன்றை அமைத்து ஒரு வாகனத் தரிப்பிடத்தையும் அமைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம். எனவே, ஆட்சி அதிகாரம் எமக்கு கிடைத்தால் இந்த திட்டங்களை செயல்படுத்துவோம் என்றார்.