• Nov 22 2025

யாழில் வர்த்தக நிலையத்தில் உயிரைமாய்த்த இளைஞன்; கடன் சுமையால் நடந்த துயரம்

Chithra / Nov 18th 2025, 7:48 pm
image



கடன்சுமை காரணமாக யாழில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் உயிர்மாய்த்துள்ளார்.

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தந்தையின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை அந்த வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

கடன்சுமை காரணமாக குறித்த இளைஞன் உயிர்மாய்த்ததாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் வர்த்தக நிலையத்தில் உயிரைமாய்த்த இளைஞன்; கடன் சுமையால் நடந்த துயரம் கடன்சுமை காரணமாக யாழில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் உயிர்மாய்த்துள்ளார்.அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த இளைஞன் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தந்தையின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அந்த வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். கடன்சுமை காரணமாக குறித்த இளைஞன் உயிர்மாய்த்ததாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement