• Nov 21 2025

பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி கோர விபத்து; பெண் பலி - மூவர் காயம்

Chithra / Nov 21st 2025, 1:40 pm
image

கண்டி - ரிக்கிலகஸ்கட, கட்டுகஸ்ஹின்ன பகுதியில்  இன்று  காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர்  காயமடைந்துள்ளனர். 

பேருந்தும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் முச்சக்கர வண்டியில் பயணித்த 45 வயதான பெண் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்து மூவரும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு ஆண்களும் 7 வயதான சிறுவனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி கோர விபத்து; பெண் பலி - மூவர் காயம் கண்டி - ரிக்கிலகஸ்கட, கட்டுகஸ்ஹின்ன பகுதியில்  இன்று  காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர்  காயமடைந்துள்ளனர். பேருந்தும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் உயிரிழந்தவர் முச்சக்கர வண்டியில் பயணித்த 45 வயதான பெண் என தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் காயமடைந்து மூவரும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் இரண்டு ஆண்களும் 7 வயதான சிறுவனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement