• Nov 22 2025

அடுத்து எங்கள் ஆட்சிதான் மலரும் நுகேகொடை பேரணியில் சாமர சம்பத் எம்.பி. சூளுரை

dorin / Nov 21st 2025, 8:59 pm
image

அடுத்து எங்கள் ஆட்சிதான் மலரும் என்பதற்கான ஆரம்ப கட்ட சமிக்ஞையே இந்தக் கூட்டமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

நுகேகொடையில் இன்று நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தலைவர்களை உருவாக்குவதற்குரிய கூட்டம் அல்ல நுகேகொடை பேரணி. நேரம் வரும்போது நாம் அடுத்த ஜனாதிபதியை ஒன்றிணைந்து தெரிவுசெய்வோம்.

இன்றைய கூட்டத்துக்குரிய ஒலிபெருக்கிகள் கழற்றப்பட்டுள்ளன. பரவாயில்லை,சிறைச்சாலையும் சென்றுவிட்டோம். எனவே, அரசின் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணியப் போவதில்லை.

நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது நாமலின் பட்டப்படிப்பு பற்றி பேசுவதற்கு முன்னுரிமை வழங்கும் நிலைக்கு அரசு வந்துவிட்டது. நாமலின் பட்டப்படிப்பு பற்றி தேடுவதற்கு முன்னர் ஆட்சியாளர்கள் தமது கல்வித் தகைமைகளை வெளிப்படுத்த வேண்டும்.என்றார்.

அதேவேளை,தனது உரையின்போது நாமல் ராஜபக்ஷவை சாமர எம்.பி. புகழ்ந்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து எங்கள் ஆட்சிதான் மலரும் நுகேகொடை பேரணியில் சாமர சம்பத் எம்.பி. சூளுரை அடுத்து எங்கள் ஆட்சிதான் மலரும் என்பதற்கான ஆரம்ப கட்ட சமிக்ஞையே இந்தக் கூட்டமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.நுகேகொடையில் இன்று நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,தலைவர்களை உருவாக்குவதற்குரிய கூட்டம் அல்ல நுகேகொடை பேரணி. நேரம் வரும்போது நாம் அடுத்த ஜனாதிபதியை ஒன்றிணைந்து தெரிவுசெய்வோம்.இன்றைய கூட்டத்துக்குரிய ஒலிபெருக்கிகள் கழற்றப்பட்டுள்ளன. பரவாயில்லை,சிறைச்சாலையும் சென்றுவிட்டோம். எனவே, அரசின் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணியப் போவதில்லை.நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது நாமலின் பட்டப்படிப்பு பற்றி பேசுவதற்கு முன்னுரிமை வழங்கும் நிலைக்கு அரசு வந்துவிட்டது. நாமலின் பட்டப்படிப்பு பற்றி தேடுவதற்கு முன்னர் ஆட்சியாளர்கள் தமது கல்வித் தகைமைகளை வெளிப்படுத்த வேண்டும்.என்றார்.அதேவேளை,தனது உரையின்போது நாமல் ராஜபக்ஷவை சாமர எம்.பி. புகழ்ந்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement