வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி மீது முச்சக்கரவண்டிமோதியதில் மேற்படி பாதசாரி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கெஸ்பாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெஸ்பாவ - பண்டாரகம வீதியில் ஆயுர்வேத சந்திக்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கெஸ்பாவவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மடபாத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய ஓட்டோவின் சாரதியும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காகப் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் கெஸ்பாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் முச்சக்கரவண்டி மோதி பரிதாப உயிரிழப்பு வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி மீது முச்சக்கரவண்டிமோதியதில் மேற்படி பாதசாரி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் கெஸ்பாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெஸ்பாவ - பண்டாரகம வீதியில் ஆயுர்வேத சந்திக்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது.கெஸ்பாவவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மடபாத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்துடன் தொடர்புடைய ஓட்டோவின் சாரதியும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காகப் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து தொடர்பில் கெஸ்பாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.