யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று,தாளையடி பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டிப்பர் ஒன்று மீட்கப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த டிப்பரில் பல ஆண்டுகளாக இரவு பகலாக மணல் கடத்தல் இடம்பெற்று வந்த நிலையில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அத்துக்கல தலமையில் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட மருதங்கேணி பொலிசார் குறித்த பகுதியில் வைத்து மண்ணுடன் டிப்பர் மீட்கப்பட்டதுடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட டிப்பரையும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கு மருதங்கேணி பொலிசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் சட்டவிரோத மணல் அகழ்வு டிப்பருடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று,தாளையடி பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டிப்பர் ஒன்று மீட்கப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டது.குறித்த டிப்பரில் பல ஆண்டுகளாக இரவு பகலாக மணல் கடத்தல் இடம்பெற்று வந்த நிலையில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அத்துக்கல தலமையில் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட மருதங்கேணி பொலிசார் குறித்த பகுதியில் வைத்து மண்ணுடன் டிப்பர் மீட்கப்பட்டதுடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட டிப்பரையும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கு மருதங்கேணி பொலிசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.