எதிர்க்கட்சி இன்று நுகேகொடைவில் ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று பிற்பகல் கொழும்பு கோட்டையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த 'எமது தலைமுறை' கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்க்கட்சியின் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்ல திட்டங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இது ஏற்பாடு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மீண்டும் ராஜபக்சக்களால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்றும், சஜித் பிரேமதாஸ தமிழர்களின் வாக்குகளைப் பெற்று, பின்னர் அதே மக்களுக்கு எதிராகச் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
ராஜபக்சக்களின் துரதிர்ஷ்டவசமான சகாப்தம் மீண்டும் வர இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சியின் பேரணிக்கு வந்திருப்பவர்கள் கறிக்கடைக்குச் சென்று மீண்டும் வந்திருக்கும் "முட்டாள்கள்" என்றும் மேலும் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் செய்யப்பட்ட அநீதியான நடவடிக்கைகளால் சிறை செல்லவிருப்பவர்களைக் காப்பாற்றுவதற்காகவே இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.
சிறை செல்லவுள்ளோரை காப்பாற்ற முட்டாள்கள் போராட்டம்; நுகேகொடை போராட்டத்தை எதிர்த்து கொழும்பில் வெடித்த போர் எதிர்க்கட்சி இன்று நுகேகொடைவில் ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று பிற்பகல் கொழும்பு கோட்டையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த 'எமது தலைமுறை' கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்க்கட்சியின் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்ல திட்டங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இது ஏற்பாடு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.மீண்டும் ராஜபக்சக்களால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்றும், சஜித் பிரேமதாஸ தமிழர்களின் வாக்குகளைப் பெற்று, பின்னர் அதே மக்களுக்கு எதிராகச் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் ராஜபக்சக்களின் துரதிர்ஷ்டவசமான சகாப்தம் மீண்டும் வர இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.இதற்கிடையில், எதிர்க்கட்சியின் பேரணிக்கு வந்திருப்பவர்கள் கறிக்கடைக்குச் சென்று மீண்டும் வந்திருக்கும் "முட்டாள்கள்" என்றும் மேலும் தெரிவித்தார். கடந்த காலத்தில் செய்யப்பட்ட அநீதியான நடவடிக்கைகளால் சிறை செல்லவிருப்பவர்களைக் காப்பாற்றுவதற்காகவே இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.