• Jul 21 2025

கசூரினா கடற்ரையில் திடீரென பற்றிய தீ - சவுக்கு மரங்கள் பல தீயில் எரிந்து நாசம்!

shanuja / Jul 21st 2025, 9:23 am
image

காரைநகர் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் நேற்று (20) இரவு திடீரென தீ விபத்து நிகழ்ந்துள்ளது. 


காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்று இரவு 9 மணியளவில்  தீ பரவியுள்ளது.


கடற்கரைப் பகுதிகளில் திடீரென பரவிய தீயால் கடற்கரைக்கு அருகிலுள்ள சவுக்கு மரங்கள், பனை மரங்கள், புற்கள் என்பன தீயில் கருகி நாசமாகியுள்ளன. 


தீப் பரவல் ஏற்பட்டதை அவதானித்த பிரதேச மக்கள் பொலிஸாருக்கும் கடற்படையினருக்கும்  தகவல் வழங்கினர். 


தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் கடற்படையினரும் பிரதேச சபையினரும் தண்ணீர் பவுசர்கள் மூலம் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 


எனினும் கடற்கரைப் பகுதிகளிலுள்ள பல சவுக்கு மரங்கள், புற்தரைகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன. 

பல மணிநேரத்தின் பின்னர் அதிகாலை 2 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 


தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றும் தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கசூரினா கடற்ரையில் திடீரென பற்றிய தீ - சவுக்கு மரங்கள் பல தீயில் எரிந்து நாசம் காரைநகர் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் நேற்று (20) இரவு திடீரென தீ விபத்து நிகழ்ந்துள்ளது. காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்று இரவு 9 மணியளவில்  தீ பரவியுள்ளது.கடற்கரைப் பகுதிகளில் திடீரென பரவிய தீயால் கடற்கரைக்கு அருகிலுள்ள சவுக்கு மரங்கள், பனை மரங்கள், புற்கள் என்பன தீயில் கருகி நாசமாகியுள்ளன. தீப் பரவல் ஏற்பட்டதை அவதானித்த பிரதேச மக்கள் பொலிஸாருக்கும் கடற்படையினருக்கும்  தகவல் வழங்கினர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் கடற்படையினரும் பிரதேச சபையினரும் தண்ணீர் பவுசர்கள் மூலம் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் கடற்கரைப் பகுதிகளிலுள்ள பல சவுக்கு மரங்கள், புற்தரைகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன. பல மணிநேரத்தின் பின்னர் அதிகாலை 2 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றும் தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement