• Jul 07 2025

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டமூலம்! அமைச்சர் விஜித அறிவிப்பு

Chithra / Jul 6th 2025, 11:19 am
image


பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டத்தை அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவதே எமது இலக்காகும் என  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் இயக்கம் எமதாகும்.  இந்த சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை  எடுக்கும் அதேவேளை, பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டமொன்றும் அவசியமாகும். 

எனவே  இந்த புதிய சட்டத்தை மூன்று மாதங்களில் அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவது எமது இலக்காகும்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் விஜித்த ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இந்த சட்டம் மூலம் தொடர்பில் செயற்பட்டு வருகிறோம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு தற்போது அமைச்சரவையினால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தற்போது தொடர்ந்தும் கூடுகிறது. 

எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, தற்போது நாட்டில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமாகும் என்றார்.


பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டமூலம் அமைச்சர் விஜித அறிவிப்பு பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டத்தை அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவதே எமது இலக்காகும் என  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் இயக்கம் எமதாகும்.  இந்த சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை  எடுக்கும் அதேவேளை, பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டமொன்றும் அவசியமாகும். எனவே  இந்த புதிய சட்டத்தை மூன்று மாதங்களில் அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவது எமது இலக்காகும்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் விஜித்த ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பொருளாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இந்த சட்டம் மூலம் தொடர்பில் செயற்பட்டு வருகிறோம்.பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு தற்போது அமைச்சரவையினால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தற்போது தொடர்ந்தும் கூடுகிறது. எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, தற்போது நாட்டில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமாகும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement