• Oct 11 2025

அதிக மாத்திரைகளை உட்கொண்டதால் பறிபோன உயிர்!

shanuja / Oct 10th 2025, 11:26 pm
image

யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். 


மானிப்பாய் - சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தெள்ளிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 


இந்நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக நேற்றையதினம் வீட்டில் வைத்து உட்கொண்டுள்ளார்.


இதனையடுத்து அவருக்கு சுகவீனம் ஏற்பட்டதால்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். 


இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர்  உயிரிழந்துள்ளார்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

அதிக மாத்திரைகளை உட்கொண்டதால் பறிபோன உயிர் யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். மானிப்பாய் - சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தெள்ளிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக நேற்றையதினம் வீட்டில் வைத்து உட்கொண்டுள்ளார்.இதனையடுத்து அவருக்கு சுகவீனம் ஏற்பட்டதால்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர்  உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement