கூகுள் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகையான இட்லியை கொண்டாடி இன்று சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் அவ்வப்போது விசேட டூடுல்களை வெளியிடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில், தமிழர் கலாசார உணவினை பிரபலப்படுத்தும் வகையில் இட்லி குறித்ததான டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.
அதில் இட்லி, சாம்பார் மற்றும் சட்னியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'கூகுள்' என்ற வார்த்தை, இந்த டூடுலில் மையமாக உள்ளது.
கூகுள் வெளியிட்டுள்ள இந்த டூடுல், இட்லி தயாரிக்கும் முறையை எடுத்துக்காட்டுவதோடு, தமிழர்களின் பொது பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை உலகளாவிய அளவில் பிரபலப்படுத்தும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.
இந்த டூடுல் மூலம் இட்லியின் சுவை, ஆரோக்கியம் மற்றும் உலகம் முழுவதும் அதன் புகழ் மேலும் பிரபலம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இட்லியை கொண்டாடும் விதமாக கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல் கூகுள் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகையான இட்லியை கொண்டாடி இன்று சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் அவ்வப்போது விசேட டூடுல்களை வெளியிடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளது.அந்த வகையில், தமிழர் கலாசார உணவினை பிரபலப்படுத்தும் வகையில் இட்லி குறித்ததான டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.அதில் இட்லி, சாம்பார் மற்றும் சட்னியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'கூகுள்' என்ற வார்த்தை, இந்த டூடுலில் மையமாக உள்ளது.கூகுள் வெளியிட்டுள்ள இந்த டூடுல், இட்லி தயாரிக்கும் முறையை எடுத்துக்காட்டுவதோடு, தமிழர்களின் பொது பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை உலகளாவிய அளவில் பிரபலப்படுத்தும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.இந்த டூடுல் மூலம் இட்லியின் சுவை, ஆரோக்கியம் மற்றும் உலகம் முழுவதும் அதன் புகழ் மேலும் பிரபலம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.