களுத்துறை - பலத்தோட்டாவில் நபரொருவரை இலக்கு வைத்து இன்று துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை 6 மணியளவில் களுத்துறை பலத்தோட்டா சாலையில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் தளத்தின் உரிமையாளரை குறி வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இருந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் 09 மீ பிஸ்டல் வகை துப்பாக்கியால் இரண்டு தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
எனினும் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் 09 மீ பிஸ்டலில் 2 வெற்று கோப்கள் மற்றும் 2 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச்சூடு தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு களுத்துறை - பலத்தோட்டாவில் நபரொருவரை இலக்கு வைத்து இன்று துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 6 மணியளவில் களுத்துறை பலத்தோட்டா சாலையில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் தளத்தின் உரிமையாளரை குறி வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இருந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் 09 மீ பிஸ்டல் வகை துப்பாக்கியால் இரண்டு தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். எனினும் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 09 மீ பிஸ்டலில் 2 வெற்று கோப்கள் மற்றும் 2 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.