அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள ராணுவ வெடிமருந்து ஆலை இன்று திடீரென்று வெடித்து சிதறியுள்ளது.
இந்த கோர விபத்தில் சிக்கி 19 பேர் காணவில்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளதால் அமெரிக்காவில் பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்று டென்னசி.
இந்த மாகாணத்தின் தலைநகராக நாஷ்வில்லில் இருந்து 97 கிலோமீட்டர் தூரத்தில் தென்மேற்கு பகுதியில் பக்ஸ்நார்ட் என்ற இடத்தில் மலை உள்ளது.
இங்கு அக்யூர்ட் எனர்ஜெடிக் சிஸ்டம்ஸ் என்ற பெயரில் அமெரிக்க ராணுவத்துக்கான வெடிமருந்து நிறுவனம் 8 கட்டடங்களுடன் செயற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இன்று திடீரென்று ராணுவ வெடிமருந்து ஆலை வெடித்து சிதறியது. இதில் அங்கு பணியாற்றிய 19 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இந்தச் சம்பவம் ஒரு தற்செயலான விபத்தா? அல்லது வேறு ஏதேனும் சதிவேலை உள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அறிவிக்க முடியாத நிலையில், காணாமல் போன 19 பேரின் குடும்பத்தினரும் கண்ணீருடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த பயங்கர விபத்து டென்னசியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வெடித்து சிதறிய ராணுவ வெடிமருந்து ஆலை. 19 பேர் மாயம் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள ராணுவ வெடிமருந்து ஆலை இன்று திடீரென்று வெடித்து சிதறியுள்ளது.இந்த கோர விபத்தில் சிக்கி 19 பேர் காணவில்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளதால் அமெரிக்காவில் பதற்றம் நிலவி வருகிறது.அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்று டென்னசி. இந்த மாகாணத்தின் தலைநகராக நாஷ்வில்லில் இருந்து 97 கிலோமீட்டர் தூரத்தில் தென்மேற்கு பகுதியில் பக்ஸ்நார்ட் என்ற இடத்தில் மலை உள்ளது.இங்கு அக்யூர்ட் எனர்ஜெடிக் சிஸ்டம்ஸ் என்ற பெயரில் அமெரிக்க ராணுவத்துக்கான வெடிமருந்து நிறுவனம் 8 கட்டடங்களுடன் செயற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று ராணுவ வெடிமருந்து ஆலை வெடித்து சிதறியது. இதில் அங்கு பணியாற்றிய 19 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்தச் சம்பவம் ஒரு தற்செயலான விபத்தா அல்லது வேறு ஏதேனும் சதிவேலை உள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அறிவிக்க முடியாத நிலையில், காணாமல் போன 19 பேரின் குடும்பத்தினரும் கண்ணீருடன் காத்துக் கொண்டுள்ளனர்.இந்த பயங்கர விபத்து டென்னசியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.