• Oct 11 2025

பாடசாலைகளின் கல்வித் திட்டத்தில் புதிய மாற்றம்

Aathira / Oct 11th 2025, 10:19 am
image

பாடசாலைகளில் தரம் 6 முதல் 8 வரை கல்வி கற்கும் குடியுரிமை பாடத்தில், சட்டக் கல்வி தொடர்பான பாடப்பகுதியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

மேலும் கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளும் போது, சாதாரண தரத்திலும் இந்த பாடப்பகுதியை தெரிவுப் பாடமாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, 6ஆம் தரத்தில் குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி மூன்றாம் தவணை மாதிரியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

ஒழுக்கமான சமுதாயம் உருவாக்க சட்டம் தொடர்பாக மாணவர்கள் அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். 

பாடசாலைகளின் கல்வித் திட்டத்தில் புதிய மாற்றம் பாடசாலைகளில் தரம் 6 முதல் 8 வரை கல்வி கற்கும் குடியுரிமை பாடத்தில், சட்டக் கல்வி தொடர்பான பாடப்பகுதியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளும் போது, சாதாரண தரத்திலும் இந்த பாடப்பகுதியை தெரிவுப் பாடமாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, 6ஆம் தரத்தில் குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி மூன்றாம் தவணை மாதிரியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒழுக்கமான சமுதாயம் உருவாக்க சட்டம் தொடர்பாக மாணவர்கள் அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement